வருகிறார் நிர்மலா சீத்தாராமன்

Published By: Robert

26 Sep, 2016 | 04:22 PM
image

உத்­தி­யோகபூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு நாளை இந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். இதன்­போது இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்கள் தொடர்பில் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் உட­னான சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டுவார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம கடந்த காலங்­களில் இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோகபூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்த பொது மத்­திய அமைச்சர் நிர்­மலா சீத்தா­ரா­மனை இலங்­கைக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார். இந்த அழைப்­பினை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த நிலையில் குறித்த விஜயம் இறுதி நேரத்தில் காலவரை­ய­றை­யின்றி பிற்­போ ­டப்­பட்­டி­ருந்­தது. இந்­திய பிர­த மர் நரேந்­திர மோடிக்கும் அமெ­ரிக்க இராஜாங்க செய­லாளர் ஜோன் கேரிக்கும் இடையில் கடந்த மாதம் 25ஆம் திகதி புது டெல்­லியில் நடந்த இந்­திய அமெ­ரிக்க பொரு­ளா­தார கலந்­து­ரை­யா­டலின் நிமித்தம் அவர் புது டெல்­லியில் நடந்த குறித்த கூட்­டத்தில் கலந்­து கொண்­ட­மை யின் கார­ண­மா­கவே குறித்த விஜயம் பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தது.

எனினும் குறித்த கலந்­து­ரை­யாடல் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில் இந்­திய மத்­திய அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் 2 நாட்கள் உத்­தி­யோகபூர்வ விஜ­ய­மொன்­றினை மேட்­கொண்டு ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர் உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட உள்ளார்.

இந்த சந்­திப்பின் போது இலங்கை - இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவில்

இணக்கம் காணப்­பட்ட இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­ தார மற்றும் தொழி­நுட்ப கூட்டு ஒப்­பந்தம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர் பாகவும் பேச்சுவார் த்தை நடத்தப்பட உள்தா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22