எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றதாக பிரதான எதிர்க்கட்சி சபையில் போராட்டம்

Published By: Digital Desk 4

17 Nov, 2021 | 10:15 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்ததாகவும் பொலிஸார் தாக்கி ஒருவர் இறந்துள்ளதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

அத்துடன் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய  பதாதைகளை தாங்கி எதிர்ப்பு தெரிவித்ததோடு இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரினர்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைவமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரவு செலவு திட்ட விவாதம் ஆரம்பிக்கும்போது ஒழுக்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவிக்கையில்,

பொலிஸ்  அடக்கு முறைக்கு மத்தியில் அப்பாவி இளைஞர் ஒருவரை  பொலிஸார் தாக்கி இறந்துள்ளார். பனாமுர பொலிஸில் இளைஞரின் சடலம் உள்ளது. அப்பாவி இளைஞர்  ஒருவரை இவ்வாறு கொலை செய்து  இந்த பயணம்   ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.இது தொடர்பில் விசாரணை நடத்தி நியாயம் நிலைநாட்ட  வேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த சமிந்த விஜேசிறி எழுந்து குறிப்பிடுகையில், 

சட்டபூர்வமாகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியது,பொலிஸார் இதற்கு இடையூறு செய்தார்கள். அமைச்சர் சரத் வீரசேகரவே இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதான பொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், 

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாராளுமன்றம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை 99 வீதமான நீதிமன்றங்கள் தடை செய்யவில்லை. ஆனால் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக பொய் கூறி பொலிஸார் இதனை குழப்பினார்கள். நாங்களே இதனை ஒழுங்கு செய்தாேம். சபாநாயகர் தான் எமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.

 கயந்த கருணாரத்ன தெரிவிக்கையில், 

பெந்தர பாலத்திற்கு  அருகில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது .மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. பொலிஸ் வீதித் தடைகளை ஏற்படுத்தி மக்களை சிறமத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், எமது போராட்டத்தை தடுக்க நீதிமன்றம் சென்றாலும் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. கொழும்பில் உள்ள எந்த நீதிமன்றமும் உத்தரவு வழங்காத நிலையில் கொழும்பில் எங்கும் வாகனங்களை நிறுத்த பொலிஸார் இடமளிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பையும் மீறியே பொலிஸார் செயற்பட்டுள்ளனர் என்றார்.

அதனை தொடர்ந்து ரஞ்சித் மத்தும பண்டாரவை விவாதத்தில் உரையாற்றுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்தார். அவர் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை சுற்றி பதாகைகளை தாங்கி கோஷம் எழுப்பினார்கள். இதற்கு எதிராக ஆளும் தரப்பு உறுப்பினர் மொஹமட் முஸம்மில்  குரல் கொடுத்த போதும் அமைச்சர்கள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் சபையில் இருந்தார். அவரும் எந்த பதிலையும் அந்த நேரத்தில் வழங்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02