அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்பு  - துறைமுகம், பெற்றோலியம், மின்சாரம் ஒன்றிணைந்த தொழிற்சங்கம்

Published By: Digital Desk 4

17 Nov, 2021 | 09:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பு கூற வேண்டும். வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் மூட தீர்மானிக்கப்பட்டது என வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுகிறார். 

எரிபொருள் பற்றாக்குறை என கருத்து தெரிவித்தமைக்காக கைதான ஆனந்த பாலித  பிணையில் விடுதலை - தமிழ்வின்

50 நாட்களுக்கு பிறகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் அதிக நிதி செலவாகும் அது நிதி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தாதா ? அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என துறைமுகம்,பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஒன்றினைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (17) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் பாதுகாப்பு தொகையை சேமிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சர் முன்னெடுக்கவில்லை.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்கான காரணம், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக எடுக்கவில்லை அது திட்டமி;ட்ட சதி நைஜீரிய நாட்டு நிறுவனத்திடமிருந்து மசகு எண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நைஜீரிய நாட்டு நிறுவனத்திடமிருந்து ஒருபோதும் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படவில்லை.

நைஜீரிய நாட்டு நிறுவனம் உரிய நேரத்தில் மசகு எண்ணெயை நாட்டுக்கு கொண்டு வரவில்லை.இதன் காரணமாகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.

தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தற்போது 33ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல்;,55ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மாத்திரம் கையிருப்பில் உள்ளது இனிவரும் காலங்களில் நிச்சயம் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுப்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது என வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுவது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

மூடப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்கும் போது தரமான எண்ணெய் விநியோகத்திற்கு சுமார் 10 நாட்கள் மேலதிகமாக தேவைப்படும் 50 நாட்களுக்கு நிலையத்தை மூடியுள்ளதால் சுமார் 10 கோடிக்கும் அதிக நிதி இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 1090 ஊழியர்கள் சேவையாற்றுகிறார்கள்.50 நாட்களுக்கு அவர்கள் வேலையில்லாமல் இருந்தாலும் அரசாங்கம் அவர்களக்கு சம்பளம் வழங்க வேண்டும் அதற்காகக கோடி கணக்கில் நிதி ஒதுக்க வேண்டும்.

இவை மாத்திரம் நிதி நெருக்கடியை மேலும் துரிதப்படுத்தாதா,வலு சக்தி அமைச்சரின் கருத்துக்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றது எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புக்களுக்க அவர் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01