பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ! விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் - ரஞ்சித் மத்தும பண்டார

Published By: Digital Desk 3

17 Nov, 2021 | 09:23 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மக்களின் ஜனநாயக போராட்டங்களை தடுக்க முயற்சித்த இந்த அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை.

அத்துடன் நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர்  ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்துக்கு எதிராக அரச ஊழியர்கள், விவசாயிகள் என பொதுமக்கள் வீதிக்கு இறங்கும் போது அதனை  அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தி தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது. 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் அலைக்கு இன்று அரசாங்கம் அச்சமடைந்திருக்கின்றது. எமது போராட்டத்தை தடைசெய்ய பொலிஸார் நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதும் நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைகளை நிராகரித்திருக்கின்றது.

அவ்வாறு இருந்தும் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் பொலிஸாரை பயன்படுததி இதில் அரசியல் செய்ய முயற்சித்துள்ளார்.

அத்துடன் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸாரை ஏவி எமது பிரதேச தலைவர்களின் வீட்டுகளுக்கு சென்று அவர்களை அச்சுறுத்தி இருக்கின்றது. அமைச்சர் சரத் வீரசேகரவின் நடவடிக்கை குறித்து நாங்கள் வெடக்ப்படுகின்றோம். 

எமது போராட்டத்துக்கு. வந்த ஒரு நபர் அம்பிலிபிடிய பிரதேசத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்துள்ளார். இதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் அந்த அரசாங்கத்தின் ஜனநாயகமா என கேட்கின்றோம்.

அத்துடன் மேல் மாகாணத்துக்கு வரும் பஸ்களை தடுத்து நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரினால் சுற்று நிருபம் அனுப்பப்பட்டிருக்கின்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நியமிக்கட்டுள்ள பொலிஸ் மா அதிபர் சட்டத்தை மீறி செயற்படுகின்றார். அடக்குமுறைகளை பயன்படுத்திக்கொண்டு மக்கள் அலையை நிறுத்த முடியாது. 

அரசாங்கத்தின் இந்த அடக்குமுறையால் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு போராட்டம் பல போராட்டங்களுக்கு வழிவகுத்திருக்கின்றது. 

எனவே எமது போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்க செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

என்றாலும் பொலிஸாரின் அடக்குமுறையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். அன்னும் ஆயரக்கணக்கான மக்கள் பொலிஸாரின் தடையால் வரமுடியாமல் இருந்துள்ளனர்.

இந்த போராட்டம் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கி இறங்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும்.  

எனவே இந்த அரசாங்கத்துக்கு நீண்ட ஆயுள் இல்லை. மக்கள் விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதற்கான ஆரம்பமே எமது போராட்டம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்