ஞானசார தேரரை தலைவராக்கி முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா ? - ரிஷாத் சபையில் கேள்வி

Published By: Gayathri

17 Nov, 2021 | 02:31 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி''எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை  “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார். 

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம் ,மதம், கலாசாரம்  தொடர்பில் உள்ளன. 

அதேபோன்று தேச வழமை சட்டம், கண்டிய சட்டம் போன்றவையும் உள்ளன. இவற்றை இல்லாதொழித்து "ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற செயலணி ஒன்றை கொண்டு வருவதற்காக  ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்'' எனக்கூறிய ஞானசார தேரரை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள்.

இந்த உலகில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட 200 கோடி முஸ்லிமாக்கள் உள்ளனர். அல்லாஹ்வை வஞ்சிப்பதை அல்லாஹ்வை ஏசுவதனை ஏற்றுக்கொள்ளாத 54 முஸ்லிம் நாடுகள் உள்ளன.

அவ்வாறிருக்கையில்  ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்'' எனக்கூறிய ஒரு குற்றவாளியை முன்னாள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை செயலணியின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன?அல்லாஹ்வை  கேவலப்படுத்திய ஒருவரை நியமிப்பதன் மூலம் நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?

இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களை  மிரட்டலாம் என்று நினைக்கின்றீர்களா? இந்த நியமனத்தால் சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? சிங்களவர்கள் கூட இந்த நியமனத்தை ஏற்கவில்லை. 

9 வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்த இரண்டு வருட ஆட்சியில் பலாத்காரமாக பிடுங்கி எடுத்துவிட்டீர்கள். 

அவர் எத்தனையோ புரட்சிகளை செய்தார். அவருடன் நாம்  பக்கபலமாக  இருந்து செயற்பட்டோம். ஆனால் இந்த இரண்டு வருட ஆட்சியில் சண்டித்தனமாக எமது உரிமைகளை பறிக்கின்றீர்கள்.

நான் சிறையில் இருந்தபோது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளைக்கூட இந்த சபையில் ஒரு இனத்தின் மக்கள் தலைவனாக கூறுவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. எனது குரலை அடக்கினீர்கள். 

இவ்வாறான செயல்கள் மூலம் உங்களால் இந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க முடியாது என்பதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10