நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - ரணில்

Published By: Digital Desk 3

17 Nov, 2021 | 10:54 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது இருக்கும் ஒரேவழி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதாகும். எதிர்கால இளைஞர்கள் மற்றும் மத்திய வர்த்தகத்தினரை நாங்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் பலவீனமடைந்தால் நாடு எந்த நிலைக்கு சென்றுவிடும் என தெரியாது. அதனால் அரசாங்கம் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றை 2020இல் கட்டுப்படுத்த நாங்கள் செயற்பட்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. என்றாலும் தற்போது முழு பாராளுமன்றமும் இணைந்தே இந்த பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டி இருக்கின்றது என்றாலும் சுகாதார துறைக்கு 2020இல் 255 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் 2022க்கு சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்டிருப்பது 234 பில்லியன் ரூபாவாகும் 67 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் எப்படி கொவிட்டை கட்டுப்படுத்துவது? ஆனால் 2021 இல் இதுவரை சுகாதார துறைக்கு 301 பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கின்றது.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சுக்கு 2021 இல் 402 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2022க்கு 421 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வருடம் சுகாதாரதுறையில் இருந்து இராணுவத்துக்கு 12 பில்லியன் கொவிட் கட்டுப்பாட்டுக்காக வழங்கப்பட்டது. 

இந்த வருடம் ராணுவத்துக்கு கொவிட் கட்டுப்பத்த நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு மாற்றமாக இகுனுகொட பாதுகாப்பு அமைச்சின் செலவுக்காக அதிகம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எந்த விடயத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும்.

அதேபோன்று வரவு செலவு திட்டத்தில் சமநிலை இல்லை வரவு செலவு திட்டத்தில் 89வீதம் 10அமைச்சுகளுக்கே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய 11வீதம்தான் மற்ற அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் 74வீதம் நிதி, பாதுகாப்பு,மற்றும் அரச சேவை மற்றும் உள்நாட்டலுவல்கள் என்ற 3 அமைச்சுக்களுக்கே அதிகம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

அனைத்து அமைச்சுக்களுக்கும் மூலதன செலவு இருக்கவேண்டும். ஆனால் பெருந்தெருக்கல் அமைச்சுக்கே அதிகம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய அமைச்சுக்களுக்கு இல்லை. இதுதொடர்பாக நிதி அமைச்சு பதிலளிக்கவேண்டும்.

அத்துடன் கொவிட் பூரணமாக கட்டுப்படுத்த இன்னும் 2வருடங்களாவது செல்லும். தொற்று நோயின் ஒரு சுற்று முடிவடைந்திருக்கின்றது. அடுத்த சுற்று டிசம்பர் ஆகும்போது ஏற்படும். 

 அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் விநியோகம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. சீனாவின் வலு சக்தி பிரச்சினை இருக்கின்றது. இது கொரியா, ஜப்பானுக்கு பாதிக்கின்றது.

தொற்று நிலைமை காரணமாக அரச நிதி முகாமைத்துவத்தில் மேலதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கு மாத்திரமல்ல. இதில் தேசிய மட்டத்தில் ஏற்படுத்திக்கொண்டபிரச்சினையும் இருக்கின்றுது. சில நாடுகள் இந்த பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.  ஆனால் நாங்கள் இந்த பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டோம். 

2019ஆம்போது நாங்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு பாதுகாத்துக்கொண்டு இந்த பொருளாதாரத்தை அரசாங்கத்துக்கு ஒப்படைத்தோம். அதனை நாங்கள் பாதுகாத்த முறைக்கு அரசாங்கம் கொண்டுசெல்லவில்லை. அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் தவறு. அதன் பெறுபேற்றை நாங்கள் இன்று காண்கின்றோம்.

எமது நாடு இறக்குமதியை அடிப்படையாக்கொண்ட சந்தை பொருளாதாரமாகும். நல்லதோ கெட்டதோ அதுவே எமக்கு இருக்கின்றது. இறக்குமதியை வரையறை செய்ததால் பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 

ஜனவரி, ஆகஸ்ட் மாத வருமான பதிப்பீடு 1,200 டொலர் மில்லியன் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது ஆனால் இதன் வித்தியாசம் 290மில்லியன் ஏற்பட்டுள்ளது. எப்படி இது இடம்பெற்றது.

அத்துடன் எமது வெளிநாட்டு செலாவணி 2 டொலர் பில்லியனாகும். அதில் 300 பில்லியன் தங்கமாகும். எஞ்சி இருப்பது 1.7 டொலர் பில்லியனாகும். இந்த நிலையில் நாட்டை கொண்டுசெல்ல முடியாது வெளிநாட்டு செலாவணி பற்றாக்குறை காரணமாக கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

ஒரு வருடத்ததுக்கு 5,6பில்லியன் வரை அடுத்த வருடங்களில் கடன் செலுத்த இருக்கின்றது. எப்படி செலுத்துவது? அதனால்  இந்த பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்குமே இருக்கின்றது. மத்திய வங்கி ஆளுநருக்கு தன்னிச்சையாக செயற்படமுடியாது.

அதேபோன்று அடுத்த வருடத்துக்கான அரச வருமானத்தை எப்படி பெற்றுக்கொள்ளப்போவது என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜீ.எஸ்.பி சலுகையை எப்படியாவது பெற்றுக்கொள்ளவேண்டும் உரப்பிரச்சினை காரணமாக மார்ச் மாதமாகும் போது உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கின்றது. 

உற்பத்திகளுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்திருப்பதால் விநியோக தடைப்படும் அபாயம் இருக்கின்றது. ரூபாவின் பெருமதி வீழ்ச்சியடைந்து செல்கின்றது. டொலரின் பெறுமதி 203 என தெரிவிக்கப்பட்டாலும் வங்கிகளில் 240ரூபாவுக்கே வழங்கப்படுகின்றது. 

இந்த நிலைமையை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் பாரிய வீழ்ச்சி ஏற்படும். எமது மத்திய வர்க்கத்தினர் வீழ்ச்சியடையும். மத்திய வர்க்கத்தினரை ஏற்படுத்த நாங்கள் ஆரம்பத்தில் இருந்து பாடுபட்டு வந்தோம். அதனை இல்லாமலாக்கவா அரசாங்கம் முயற்சிக்கின்றது.? இது 70காலம் போன்றது அல்ல.

நவீன உலகுக்கே செல்கின்றோம். அதனால் மத்திய வர்க்கத்தினர்  வீழ்ச்சியடைந்தால் அரசியல் ரீதியில் பாரிய பிரச்சினை ஏற்படும். அதனால் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண சர்வதேச நாணய நிமியத்துடன் கலந்துரையாடவேண்டும்.

அதேபோன்று ஏனைய சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை தொடர்பாக நாங்களும் கதைப்போம். அத்துடன் நாட்டில் நிதி ஒழுங்கை ஏற்படுத்தவேண்டும். நிதி ஒழுங்கை ஏற்படுத்த தவறினால் முழு பாராளுமன்றமும் பாதிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04