அரச ஊழியர்களல்ல ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு பெரும் சுமை - ஜே.வி.பி. சாடல்

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 10:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையல்ல ,ராஜபக்ஷ குடும்பம் தான் நாட்டுக்கு பெரும் சுமையாக உள்ளது. ஊழல் மோசடி நிறைந்த ராஜபக்ஷர்களின் நிர்வாகத்தை வீழ்த்த நாட்டு மக்கள் இனிவரும் காலங்களிலாவது அரசியல் ரீதியில் அறிவார்ந்த சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். 

ஏழு மூளையினை உடைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வரவு-செலவு திட்டம் மக்கள் தற்போது எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமையவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் அந்துன்நெதி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நடுத்தர மக்கள் பெரும் சிரமத்தை எதிர்க் கொள்கிறார்கள். பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடுத்தர மக்கள் ஒருநாள் சம்பளத்தை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுகிறார்கள் மக்களின் போராட்டத்தை அரசாங்கத்தினால் இனி கட்டுப்படுத்த முடியாது.

மக்கள் எதிர்க் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் நிதியமைச்சர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை.பஷில் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் பொருளாதாரத்திற்கு புத்துணர்வளிக்கும் அவருக்கு 7 மூளை உள்ளது என பல வர்ணணைகளை ஆளும் தரப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவிற்கு வழங்கினார்கள்.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்வதற்கும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நிதியமைச்சர் எவ்வித உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை அவர் நிதியமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்தே பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடைந்தது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.2022ஆம் ஆண்டு அரச வருமானத்தை காட்டிலும் செலவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. வருவாய் ஈட்டும் வழிமுறைகளை நிதியமைச்சர் தெளிவுப்படுத்தவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலிலும்,பொதுத்தேர்தலிலும் வெற்றிப்பெறுவதற்கு அரச ஊழியர்கள் பெரும் பங்கு வகித்தார்கள்.அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என குறிப்பிட்டு நிதியமைச்சர் அரச ஊழியர்களுக்கு பிரதிஉபகாரம் செய்துள்ளார்.அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையல்ல,ராஜபக்ஷர்களின் குடும்பம் தான் நாட்டுக்கு சுமை.

அரச சேவையினை முன்னெடுத்து செல்வதை காட்டிலும் அதிக நிதி ராஜபக்ஷர்களின் குடும்பத்தினருக்காகவும் அவர்களை சார்ந்துள்ளோர்;க்காகவும் செலவிடப்படுகிறது ஊழல்,மோசடி நிறைந்த ராஜபக்ஷர்களின் ஆட்சியை முழுமையாக இல்லாதொழித்து சிறந்த ஆட்சியை உருவாக்க நாட்டு மக்கள் இனி வரும் காலங்களிலாவது அறிவுபூர்வமாக அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47