கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தோருக்கு தடையேற்படுத்திய பொலிஸார்

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 10:36 PM
image

(நா.தனுஜா)

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பலபாகங்களிலிருந்தும் கொழும்பைநோக்கி வருகைதந்த மக்களைப் பொலிஸார் தடுத்துநிறுத்தித் திருப்பியனுப்பியதுடன் பொதுமக்களை ஏற்றிவந்த பஸ்வண்டிகளையும் வழமைக்கு மாறாக சோதனையிட்டனர்.

அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கும் செயற்திறனற்ற நிர்வாகத்திற்கும் எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிரான இம்மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பஸ்வண்டிகள் ஊடாகவும் பேரணியாக நடந்தும் கொழும்பிற்கு வருகைதருவதற்கு முற்பட்ட மக்களுக்கு பொலிஸார் பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்தினர்.

அதன் ஓரங்கமாக புத்தளம் - அநுராதபுரம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு வருகைதந்த மக்களைத் தடுத்துநிறுத்திய இராஜாங்கனை பொலிஸார், அவர்களை மீளத்திரும்பிச்செல்லுமாறு பணித்தனர்.

பாணந்துறை, பேலியகொட, பொலனறுவை உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பொதுமக்களை ஏற்றிவந்த பஸ்வண்டிகள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மக்களை ஏற்றிவந்த சில பஸ்வண்டிகள் திருப்பியனுப்பப்பட்டன.

அதுமாத்திரமன்றி வழமைக்கு மாறாக அநேகமான இடங்களில் பொலிஸார் வீதிமறியல்களைப் பயன்படுத்தி வாகனங்களை மறித்து சோதனைகளில் ஈடுபட்டதுடன் கூட்டமாக வருகைதந்த மக்களையும் தடுத்துநிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டனர்.

போராட்டத்தை நிறுத்துவதற்கும் மக்கள் கொழும்பிற்கு வருகைதருவதைத் தடுப்பதற்கும் பொலிஸாரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றைக்கடந்து நாட்டில் பலபாகங்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளெனத் திரண்டு கொழும்பை வந்தடைந்தனர்.

அதுமாத்திரமன்றி மக்கள் கொழும்பிற்கு வருகைதருவதற்கு எதிராகப் பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டபோது நடுவீதியில் படுத்திருந்தவாறு கோஷங்களை எழுப்பியும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன போன்றோரின் முகமூடிகள் இடப்பட்ட பதாதைகளை அடித்தும் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59