5 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த ஆர்வமாகவுள்ளோம் : பிம்ஸ்டெக் செயலாளர் நாயகத்திடம் பீரிஸ் தெரிவிப்பு 

Published By: Gayathri

16 Nov, 2021 | 09:37 PM
image

(எம்.மனோசித்ரா)

 

ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நேரடி பங்கேற்புடன் நடத்த இலங்கை ஆர்வமாக உள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 21 ஆவது ஐயோரா அமைச்சர்கள் கூட்டத்தின் அம்சமாக, பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்லுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடினார். 

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது :

இலங்கை தலைமைப் பொறுப்பை வகித்தபோது, பிம்ஸ்டெக் சாசனத்தை இறுதி செய்வதிலும், பிம்ஸ்டெக்கின் எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் உறுப்பு நாடுகளுக்கு இடையே வரையறுக்கப்பட்ட ஒத்துழைப்பிற்கான பகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும், நிறுவனக்கட்டமைப்பிலும் கவனம் செலுத்தியதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது வலியுறுத்தினார்.

ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நேரடி பங்கேற்புடன் நடத்த இலங்கை ஆர்வமாக உள்ளதாகவும், கொவிட்-19 தொற்று நோயின் விளைவுகளை தணிக்கும் முகமாக இலங்கையில் மேற்கொள்ளபட்ட வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தைக் கருத்திற்கொண்டு உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து கூட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை விடுத்தமைக்காக நன்றி தெரிவித்த செயலாளர் நாயகம், 

தனது விஜயத்தின்போது உயர் பிரமுகர் மற்றும் வரிசை முகவர்களை சந்தித்து விஞ்ஞானம், தொழிநுட்பம், புத்தாக்கம் மற்றும் துணைத்துறைகளான சுகாதாரம் மற்றும் மனிதவள அபிவிருத்தி போன்ற இலங்கையின் முன்னணி துறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளார். 

வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் சில வரிசை நிறுவனங்களை சந்தித்து பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் துறைகளுக்கான செயற்றிட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சர் பீரிஸ் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06