காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நட்டஈடடை அல்ல நியாயத்தையே கேட்கின்றனர் - சித்தார்த்தன்

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 09:35 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது நட்டஈடு அல்ல. தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையே கேட்டு நிற்கின்றனர் என்பதை சபையில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வெறுமனே குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாக்களை கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பதுயரங்கள் தீர்ந்துவிடாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Articles Tagged Under: தர்மலிங்கம் சித்தார்த்தன் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கிருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு  வழங்கப்படத்தான் வேண்டும். ஆனால் அந்த மக்கள் உங்களிடம் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது நட்டஈடு அல்ல. அவர்கள் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்றே கேட்கின்றனர்.

தங்களுக்கான நீதியை கோரிவருகின்றனர். வெறுமனே குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாக்களை கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பதுயரங்கள் தீர்ந்துவிடாது.

சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்வதன் மூலமே யுத்த காலத்தில் காணமலாக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும். நாங்கள் கோரும் நீதிப் பொறிமுறை என்பது தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல அது சிங்கள மக்களுக்கானதும் என்பதை உணருங்கள்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களினது மட்டுமல்லாது நாட்டின் முற்போக்கு சிந்தனையாளர்களினதும்  சர்வதேச சமூகத்தினதும் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

அனைத்து அரசாங்கங்களும் அரசுக்கு மாறான கருத்துக்களை கொண்டவர்களை பயங்கரவாதி என்னும் பெயரில் கைதுசெய்வதற்கும் சிறைகளில் தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகிறது.

எனவே இச் சட்டத்தை இல்லாதொழிப்பதுடன் இச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவித்தல் வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51