அமெரிக்காவில் முதல் முறையாக இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : 2026 இல் இலங்கை - இந்தியா கூட்டாக நடத்தும்

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 09:04 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடி முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் அரங்கேற்றப்படவுள்ளது. 

அத்துடன் 2026 ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவுடன் கூட்டாக நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024 இலிருந்து 2031வரையான இரண்டு வகை உலகக் கிண்ண கிரிக்கெட் மற்றும் சம்பியன்ஸ் கிண்ண கிரக்கெட் ஆகியன நடைபெறவுள்ள வருடங்களையும் நாடுகளையும் ஐ.சி.சி. இன்று அறிவித்தது.

இதற்கு அமைய இக் காலப்பகுதியில் 14 நாடுகள் தனித்து அல்லது கூட்டாக இப் போட்டிகளை நடத்தவுள்ளன. அவற்றில் 2025 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானும் 2029 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் தனித்து நடத்தவுள்ளன.

2026 இல் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவுடன் இலங்கை கூட்டாக நடத்தும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இன்னும் 5 வருடங்களில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா நடத்தவுள்ளது.

இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அரங்கேற்றப்படவுள்ளது.

2017 இலிருந்து 2023 வரையான சுழற்சியில் ஆடவருக்கான உலக கிரிக்கெட் போட்டிகள் பெரும்பாலும் கிரிக்கெட்டின் முப்பெரும் சக்திகளான இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளையே தழுவி இருந்தன.

ஆனால், 2024 இலிருந்து 2031வரையான 7 வருட சுழற்சி காலப்பகுதியில் மூவகை பிரதான உலக கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்வகைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49