பொலிஸ்மா அதிபரின் அறிவித்தல் அரசாங்கத்தின் அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை - ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 09:21 PM
image

(நா.தனுஜா)

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தின் அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்பது தெளிவாகிறது. 

Articles Tagged Under: ரஞ்சித் மத்தும பண்டார | Virakesari.lk

வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் செயற்பாடாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து பொலிஸ்மா அதிபரால் மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு விசனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தின் அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்பது தெளிவாகிறது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவு, அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் கருத்து வெளியிடும் மற்றும் ஒன்றுகூடல் தொடர்பான அடிப்படை உரிமையை பாரதூரமாக மீறும் செயலாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் துறை கோரிய தடை உத்தரவுகள் பல நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்,பொலிஸ் மா அதிபரின் உத்தரவு நீதிமன்ற உத்தரவையும் தாண்டிய ஒன்றாக உள்ளது. கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் பிரதேச மட்டத்தில் வீதித் தடைகளை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தாத பொலிஸ் மா அதிபரால் தற்போது, இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது முற்றிலும் அரசியல் தேவை கருதியதாகும்.

அத்துடன் வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதோடு, அந்த உத்தரவுகளின்படி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04