எதிர்க்கட்சியின் போராட்டத்தால் நாட்டில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் - சன்ன ஜயசுமன

Published By: Digital Desk 3

16 Nov, 2021 | 09:19 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சி முன்னெடுக்கும் முட்டாள் தனமான போராட்டங்கள் காரணமாக மீண்டும்  வைரஸ் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் இறுதியில் மோசமான கொவிட் வைரஸ் பரவல்  தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும்  ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார். 

இவ்வாறான போராட்டங்கள் வீரத்தின் அடையாளமோ, சவாலின் அடையாளமோ அல்ல. மாறாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை எண்ணி எதிர்க்கட்சி வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நூறு வருடங்களுக்கு பின்னர் உலக தொற்றுநோய் ஒன்றுக்கு முழு உலகமும் முகங்கொடுத்து வருகின்றது. ஆனால் கொவிட் வைரஸ் தொற்று முகாமைத்துவ செயற்பாடுகளில் நாம் முன்னேற்றகரமான நிலையில் உள்ளோம். அதற்கு எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டமே காரணமாகும். 

அதேபோல் தடுப்பூசி ஏற்றும் வேலைதிட்டத்திலும் முன்னேற்றகரமான நிலையில் உள்ளோம். இப்போது மூன்றாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்னவெனில், மூன்றாம் தடுப்பூசி மூலமாக மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற காரணத்தினால் சுகாதார  மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகளை மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை தொடக்கம் (இன்று) 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் மூன்றாம் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஆலோசிக்கப்பட்டது, ஆனால் எதிர்க்கட்சி முன்னெடுக்கும் முட்டாள் தனமான செயற்பாடுகள் காரணமாக வைரஸ் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே எமது மக்களை பாதுகாக்க உடனடியாக இவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இதற்கு முன்னர் எவ்வாறான தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் மூன்றாம் தடுப்பூசியாக பைசர் ஏற்றப்படும்.

எதிர்கட்சியினர் இன்று முன்னெடுக்கும் போராட்டம் அதிருப்தியளிக்கின்றது. மிகவும் கடினமான கட்டத்தில் மக்களை காப்பாற்றி நாட்டை பாதுகாப்பான நிலையில் வைத்துள்ளோம்.

அதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையினர் அதிக சிரமப்பட்டனர். இவை எதனையும் கருத்தில் கொள்ளாது மக்களை வீதிக்கு இறக்கி போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இது வீரத்தின் அடையாளமோ, சவாலின் அடையாளமோ அல்ல, இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை எண்ணி எதிர்க்கட்சி வெட்கப்பட வேண்டும்.

இப்போதுள்ள அச்சுறுத்தல் நிலையில் மக்களை வீதிக்கு இறக்குவது என்பது ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு ஏற்பட்ட நிலைமை மீண்டும் நவம்பர் இறுதியிலும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சூழ்நிலையில் எதிர்கட்சியினர் நாடு குறித்து சிந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நாம் எதிர்கட்சியாக இருந்திருந்தால் இவ்வாறு மக்களை வீதிக்கு இறக்கியிருக்க மாட்டோம்.

 ஆனால் இதனை விட அழகாக வேறு விதத்தில் முன்னெடுத்திருப்போம். வீதிக்கு இறக்கி ஆட்சியை கேட்பதனால் எந்த பலனும் இல்லை, ஆட்சி அதிகாரத்தை வழங்க நாம் தயாராகவும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41