சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளம் காண்பதற்காக விசேட குழு

Published By: Vishnu

16 Nov, 2021 | 11:54 AM
image

சர்வதேச மற்றும் உள்ளூர் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளங் காண்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய ரீதியான அமைவிடத்தைக் கருத்திற் கொண்டு, சமுத்திர கேந்திர நிலையமாக எமது நாட்டை மேம்படுத்தும் போது சர்வதேச ஒப்பந்தங்களை ஏற்று அங்கீகரிக்கும் போது சர்வதேச தேவைகளை கருத்தில் கொண்டும், சட்டரீதியான உட்கட்டமைப்பு வசதிகளை தயாரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் குறித்த துறைசார்ந்த விடயங்களை ஆராய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பி.ஏ.ரத்னாயக்க அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதுடன், குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

அண்மையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் எம்.ரீ.நிவ் டயமன்ட் கப்பல் மற்றும் எம்.ரீ.எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல்கள் விபத்துக்குள்ளானமையால் ஏற்பட்ட பாதிப்புக்களைக் கருத்தில் கொள்ளும் போது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இதற்கு முன்னர் பி.ஏ.ரத்னாயக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக அறிமுகப்படுத்த வேண்டிய அல்லது தற்போது காணப்படும், திருத்தப்பட வேண்டிய சட்டங்களை அடையாளங் கண்டு அது தொடர்பாகவுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சந்தன ஜயசுந்தரவின் தலைமையிலான ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்; மற்றும் நீதி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31