தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளாhர்.

சிறுமியின் தாய் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் வீட்டில் யாரும் இல்லாத சமயத்திலேயே குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.