அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஜோ பைடன் - ஜி ஜின்பிங் இடையில் சந்திப்பு

Published By: Vishnu

16 Nov, 2021 | 08:41 AM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றைய தினம் தங்களது முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.

தாய்வான், ஹொங்கொங் மற்றும் பீஜிங்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் மேற்குப் பகுதியான சின்ஜியாங்கில் முஸ்லிம்களை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளின் உறவு மோசமடைந்து வரும் நிலையில் இருவரும் காணொளி மூலமாக பேச்சுவார்த்தையை திங்களன்று நடத்தியுள்ளனர்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையான மோதலுக்கு மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தலைவர்களாக நம் இருவருக்கும் பொறுப்பு உள்ளது என்று ஜோ பைடன் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பீஜிங்கில் இருந்து பேசிய ஜி, பைடனை "எனது பழைய நண்பர்" என்று குறிப்பிட்டார், மேலும் போட்டியாளர்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். மற்றும் சீனாவும் அமெரிக்காவும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஜனவரியில் பைடன் பதவியேற்றதிலிருந்து இரு தலைவர்களும் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளனர்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜி வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை, நேருக்கு நேர் உச்சிமாநாட்டின் வாய்ப்பை நிராகரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08