2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மலையக மக்களை ஏமாற்றியுள்ளது -  வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 4

15 Nov, 2021 | 10:12 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் நன்மைகளை அனுபவிக்க முதலில் மக்கள் உயிருடன் இருக்க வேண்டும் .ஆனால் அதற்கான  வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை என  வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Articles Tagged Under: வடிவேல் சுரேஷ் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற 2022ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்கள் சார்பான எந்த திட்டங்கள், நிவாரணங்களும் கிடையாது. மலைய மக்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு என்ற ஒரு அறிவிப்பு   மட்டும் உள்ளது. அதுவும் 3 வருடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வீட்டுக்கு 15 இலட்சம் ரூபா அடிப்படையில்  பார்த்தாலும் 330 வீடுகள் வரையே நிர்மாணிக்க முடியும். அதுவும் வருடத்துக்கு 110 வீடுகள் என்ற அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்படும்.

இதுவா மலையகத்திற்கான அபிவிருத்தி?. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பந்து விளையாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இளைஞர்களுக்கான எதிர்காலம் இல்லை. இந்த நிலையில் மலையகத்தின்  கல்வி புரட்சிக்கு நாம் என்ன செய்வது?மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் எங்கே?. வைத்தியசாலைகளின் அபிவிருத்தி எங்கே?வைத்தியர்கள், தாதியர்கள் நியமனங்கள் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்கின்றோம்.

மேலும் மலையகத்தில் என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல வீதி அபிவிருத்திப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. மலையகத்தை ஏன் வஞ்சிக்கின்றீர்கள்?நிதி ஒதுக்கீடுகளில் ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? ஏன் ஒரே வஞ்சனை செய்கின்றீர்கள் ?

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீண்ட கால நன்மைகளைக்கொண்ட திட்டங்கள் அறிவிப்புக்கள் உள்ளதாக கூறுகின்றீர்கள்.

அந்த நன்மைகளை அனுபவிக்க முதலில் மக்கள் உயிருடன் இருக்க வேண்டும் .ஆனால் அதற்கான  வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பலதடவைகள் பல மடங்குகளில் அதிகரித்து விட்டன. இதனால் மக்கள் மூன்று வேளை உணவுக்கு போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24