திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை வரை பயணித்த தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த 6 பெண்கள் மற்றும் 12 ஆண்கள், ஹொரவப்பத்தான மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரவப்பத்தான பொலிஸ் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டுள்ளனர்.