அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்ற நிதி அமைச்சரின் கூற்றுத் தொடர்பில் வெட்கமடைகின்றோம் - கிரியெல்ல

Published By: Digital Desk 3

15 Nov, 2021 | 08:11 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆரம்பித்திலேயே வரி குறைப்பு செய்து 800 பில்லின் அரசாங்கத்தின் வருமானத்தை இல்லாமலாக்கிக்கொண்டது.

அதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணமாகும். ஆனால் நாங்கள் எமது ஆட்சிக்காலத்தில் அரச வருமானத்தை இரண்டிப்பாக்கிக்கொண்டோம். அதனால் தான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்தது என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலேயே வட் விரியை குறைத்து அரசாங்கத்துக்கு கிடைத்து வந்த 800பில்லியனை இல்லாமலாக்கிக்கொண்டது. அதுவே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகும். 

2015இல் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் அரச வருமானம் ஆயிரம் பில்லியனாக இருந்தது.எமது 4 அரை வருடத்தில் 2 ஆயிரம் பில்லியனாக அதிகரித்துக்கொண்டோம்.

அதனால்தான் மக்களின் வாழ்க்கைச்செலவை குறைக்க முடியுமாகியது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தோம்.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கினோம். ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 2020இல் நிதி ஒதுக்கி இருந்தோம்.

ஆனால் நிதி அமைச்சர் அரச செலவுகளுக்காக அடுத்த வருடத்துக்கு நிதி ஒதுக்கினோலும் முழுமையக வழங்குவதில்லை எனவும் காலாண்டுக்கு காலாண்டு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் வருமானம் தொடர்பில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும். அத்துடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு அதில் தீர்வில்லை.

 குறிப்பாக நாட்டில் டொலர் இல்லை. அதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன? வங்களில் டொலர் கேட்டால் இல்லை என்கிறார்கள்.

எமது காலத்தில் ஒருபோதும் இந்த நிலை ஏற்படவில்லை. அதேபோன்று அரசாங்கத்தின் கடன்களை எவ்வாறு செலுத்துவதென்று அரசாங்கம் தெரிவிக்கவில்லை. 

வருடத்துக்கு 6மில்லியன் டொலர் கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது.இதனை எவ்வாறு செலுத்துவதென்று எந்த திட்டத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. டொலர்களை பெற்றுக்கொள்ள ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும். அவ்வாறு எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

அத்துடன் சபையில் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க நிதி அமைச்சர் சபையில் இல்லை. பாராளுமன்றத்துக்கு வராமல் ஊடக சந்திப்புகளை நடத்தி வருகின்றார். அரச ஊழியர்கள் பாரிய சுமை என தெரிவிக்கின்றார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது வெட்கமடைகின்றோம். இவ்வாறு அரச சேவையாளர்களை அவமதிக்கவேண்டாம். 

தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அரச சேவையாளர்களை அதிகரித்தார்கள். பொய் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அரச ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்ற வில்லை. அரச ஊழியர்களின் பெருமதியை உணர்ந்தே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

அதேபோன்று விவசாயத்துக்கு இரசாயன உர பாவனையை நிறுத்துவதாக அரசாங்கம் யாருடனும் கலந்துரையாடாமலே தீர்மானத்தது.

இந்த திட்டத்தை 10 வருடத்தில் செய்வதாகவே அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒரு வருடத்திலேயே இதனை செய்ய தீர்மானித்ததால் நாட்டில் 80 வீதமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதனால்தான் இரசாயன உரம் கொண்டுவருவதை திடீரென நிறுத்த தீர்மானித்தது. அதனால் நாடு பாரிய அனர்த்தத்துக்கு ஆளாகி இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59