ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங் களை முழு­மை­யாக நிறை­வேற்ற முஸ்­லிம்­களும் பூர­ண­மாக ஒத்­து­ழைத்தால் நாம் நிச்­சயம் வெற்­றி­பெ­றுவோம்.

தமிழ், முஸ்லிம் சமூ­கமும் தமது அர­சியல், சமூக விடு­த­லையை உறு­திப்­ப­டுத்த கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். எமது தமி­ழர்­களின் உயிர் தியா­கத்தின் பின்னர் இந்த நாட்டில் எமது

சமூகம் இனப்­பி­ரச்­சி­னையில் இருந்து விடு­தலை பெறு­மாயின், எமக்­கென்ற அங்­கீ­காரம் கிடைக்­கு­மாயின் அந்த விடு­த­லையும் விடிவும் முஸ்லிம் மக்­க­ளையும் சென்­ற­டையும் என்­பதை உறு­தி­யாக தெரி­விக்க விரும்­பு­கின்றேன் எனவும் தெரி­வித்தார்.

மறைந்த முன்னாள் செனட்டர் மசூர் மௌலா­னவின் நினை­வு­தின நிகழ்வு நேற்று கொழும்பு சுவ­டிகள் திணைக்­க­ளத்தில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்

முன்னாள் செனட்டர் மசூர் மௌலான முஸ்லிம் மக்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது தமிழ் மக்­க­ளி­னதும் தலை­வ­ராக செயற்­பட்­டவர். அவர் தன்னை அர்ப்­ப­ணித்து செய­லாற்­றிய தலைவர். அவர் ஆரம்­பத்தில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் செயற்­பட்­டவர். பல சந்­தர்ப்­பங்­களில் தன்னை ஒரு தமி­ழ­ரசுக் கட்­சிக்­காரன் என்று தெரி­வித்­துள்­ளமை இன்றும் எனது மனதில் உள்­ளது. தமி­ழ­ரசுக் கட்சி சமஸ்­டியை இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக முன்­வைத்த காலங்­களில் நாம் இளை­ய­வர்­க­ளாக கட்­சிக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் போரா­டிய கால­கட்­டத்தில் எம்­முடன் இருந்து எமக்கு வழி­காட்­டிய தலை­மை­களில் மசூர் மௌலா­ன­விற்கு மிகப்­பெ­ரிய பங்கு உள்­ளது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் வர­லாற்று தீர்­மா­னங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு அவர்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­பதில், அவர்­க­ளையும் எம்­முடன் அர­வ­ணைத்து அவர்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்தி செல்லும் பய­ணத்தில் தந்தை செல்வா அன்றே உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருந்தார். அதேபோல் திரு­கோ­ண­மலை மாநாட்­டிலும் முஸ்லிம் தலை­வர்கள் பங்­கு­பற்றி முஸ்­லிம்­களின் அர­சியல் உரிமை தொடர்பில் தீர்க்­க­மான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டது. அப்­போது முஸ்­லிம்­களின் உரி­மைகள் தொடர்­பி­லான கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. அதேபோல் அர­சியல் அல­குகள் தொடர்பில் பேசப்­பட்­டது. அதா­வது அந்த மாநாட்­டிற்கு முன்னர் தமிழ் பேசும் மக்கள் என்று பேசப்­பட வார்த்­தைகள் சற்று மாற்­றப்­பட்டு தமிழ் அரசும் முஸ்லிம் அரசும் என்று இரு வேறாக பாவிக்­கப்­பட்­டதை நினை­வு­கூர விரும்­பு­கின்றேன். அந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆட்­சியில் எங்­க­ளுக்கு என்ன நிகழ்ந்­ததோ அதுவே முஸ்­லிம்­க­ளுக்கும் மத ரீதி­யா­கவும், இன ரீதி­யா­கவும் அனு­ப­வித்­தார்கள். அது இன்­னொரு வழியில் எம்­முடன் இணைக்க உரு­வாக்­கி­யுள்­ளது. அந்த அனு­ப­வங்­களும் அந்த அத்­தி­யா­யங்­களும் இந்த ஆண்டு ஜன­வரி மாதம் தேர்­தலின் போது தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே அடிப்­ப­டையில் சிந்­திக்க நேர்ந்­தது. எங்­களின் விடு­த­லைக்­காக எமது தமி­ழர்­களின் உயிர் தியா­கத்தின் பின்னர் இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சி­னையில் இருந்து விடு­தலை பெறு­மாயின் அந்த விடு­த­லையும் விடிவும் முஸ்லிம் மக்­க­ளையும் சென்­ற­டையும் என்­பதை உறு­தி­யாக தெரி­விக்க விரும்­பு­கின்றேன். கடந்த காலங்­களில் எங்­க­ளி­டையே துன்­பங்­களும் துய­ரங்­களும் பிள­வு­களும் ஏற்­பட்­டாலும் அவற்றை பொருட்­ப­டுத்­தாது அவற்றை ஒரு­புறம் ஒதுக்கி வைத்­து­விட்டு நாங்கள் எங்­களின் சிந்­த­னை­களில் ஒன்­றி­ணைந்து செல்­வதை அடை­யாளம் காண­வேண்டும்.

இந்த நாட்டின் போருக்கு பின்­னரும் மஹிந்த அர­சாங்­கத்தின் கீழ் நிகழ்ந்த நிகழ்­வு­களை எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது முஸ்­லிம்­க­ளுக்கு நிகழ்ந்த அநி­யா­யங்­களை எண்­ணிப்­பார்க்க வேண்டும். மத வழி­பா­டுகள், நம்­பிக்­கைகள், தளங்கள் எவ்­வாறு அழிக்­கப்­பட்­டது என்­பதை நீங்கள் மறந்­து­விடக் கூடாது. இதன் விளை­வுகள் தான் இன்று மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை உட்­பட உலக நாடுகள் அனைத்தும் இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொண்டு இந்த தீர்­மா­னத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சிகள் ஒன்­றி­ணைந்து எடுக்கும் முயற்­சிதான் எதிர்­கா­லத்தில் மிகவும் முக்­கியம் வாய்ந்­த­தாக இருக்­கப்­போ­கின்­றது.

அந்த தீர்­மா­னத்தில் வெறு­மனே போர்க்­குற்­றங்கள் நடந்­துள்­ளது அதை விசா­ரிக்க வேண்டும், தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பது மட்டும் அல்ல இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்­பதும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்றால் முஸ்­லிம்கள் வேறாக செயற்­பட முடி­யாது. நாங்கள் மதத்­தினால் வேறாக இருந்­தாலும் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்­களின் தாயகம் முஸ்லிம் மக்­க­ளி­னதும் சொந்தம் என்­றுதான் நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். அதேபோல் சர்­வ­தேச தலை­யீ­டு­களின் மூல­மாக எமக்கு இந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையை நாம் கொண்­டுள்ளோம். அதற்­கான சந்­தர்ப்பம் எமக்கு கிடைத்­துள்­ளது. அதில் முஸ்­லிம்­களும் எம்­முடன் ஒன்­றி­ணைந்து பய­ணிக்­கக்­கூ­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அதை முஸ்­லிம்கள் இழந்­து­விடக் கூடாது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது வெறு­மனே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ அல்­லது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அவர்­களின் சிங்­கள வாக்­கு­களில் மாத்­திரம் நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. இந்த தேர்­தலின் போது தமிழ் முஸ்லிம் மக்­களின் தீர்­மானம் தான் புதிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆயுதம் இல்­லாது, சர்­வ­தேச தலை­யீ­டுகள் இல்­லாது இந்த நாட்டில் நாம் ஒரு ஜன­நா­யக புரட்­சிக்கு வித்­திட்­டுள்ளோம்.திட்டுள்ளோம். இந்த புரட்சியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சம பங்கு உள்ளது. எனவே அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் அந்த நிலங்களில் முஸ்லிம்கள் குடியமர எங்களாலான அனைத்து விடயங்களையும் முன்னெடுப்போம். அதேபோல் தமிழ் பேசும் மக்கள் எங்கு துன்பப்படுகின்றார்களோ அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.