அரசாங்கத்திற்கு எதிராக புசல்லாவையில் மக்கள் போராட்டம்

Published By: Gayathri

15 Nov, 2021 | 12:59 PM
image

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

புசல்லாவை நயப்பன தோட்டத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உடபளாத பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து பேரணியாக நயப்பன அம்மன் ஆலய சந்தி வரை சென்று அங்கிருந்து நயப்பன பஸ் தரிப்பிடம் வரை சென்று, அங்கு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

"அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும், வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு எதுவும் இல்லை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும், அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்கவேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்" எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04