தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் - உதய கம்மன்பில

Published By: Digital Desk 3

15 Nov, 2021 | 11:19 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படும் போது அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை போல் செயற்படுவோம் என மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்போது அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ளோம்.

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.சுற்றுசூழலை மாசடைய செய்வதில் அதிக பங்கு வகிக்கும் வலுசக்தி துறையின் அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு சுற்றுசூழலை பாதுகாக்கும் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்று சூழலுக்கு பாதிப்பற்ற,சேறுபூசல் இல்லாத பிரசாரம்,அரசசார்பற்ற அமைப்புக்களுக்கு அடிபணியாத அரசியல் உள்ளிட்ட பிரதான 10வாக்குறுதிகளை முன்வைத்து 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டோம்.அதேபோல் 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிதியுதவி வழங்குபவர்களின் பெயரை வெளியிடுதாக வாக்குறுதி வழங்கினோம்.அதேபோல் தேர்தல்கால செலவுகளையும் வெளியிடுவதாக குறிப்பிட்டேன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினேன்.

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கிடைக்கப் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய மரக்கன்றுகளை நாட்டுவதாக வாக்குறுதியளித்தேன்.தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் எனக்கு 1இலட்சத்து 36ஆயிரத்து 331 வாக்குகளை வழங்கியுள்ளார்கள் அவ்வாறாயின் நான் 1இலட்சத்து 36ஆயிரத்து 331 மரக்கன்றுகளை நாட்ட வேண்டும்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முற்படும் வேளையில் கொவிட் -19 வைரஸ் பரவல் தாக்கத்தினால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை கருத்திற்கொண்டு செயற்திட்டத்தை முன்னெடுப்பதை தாமதப்படுத்தினோம்.

புதுவருட கொவிட் கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வைரஸ் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியம் தற்போது அதிகம் காணப்படுகிறது.சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மரநடுகை செயற்திட்டத்தை மீள ஆரம்பித்துள்ளோம்.

காலநிலை மாற்றம் உலகம் தற்போது எதிர்க் கொள்ளும் பிரதான  சவாலாகும்.இயற்கைக்கு எதிராக செயற்பட்டதன் விளைவை நாம் இன்று எதிர்க் கொள்கிறோம்.பூகோள வெப்பமாதலை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இலங்கை 2050ஆம் ஆண்டு காபன் பாவனையில் இருந்து விடுப்படும் திட்டத்தை வகுத்துள்ளது.

சுற்றுசூழலுக்காக குரல் கொடுத்த எனக்கு இலங்கையின் சுற்றுசூழலை பெரிதும் மாசடைய செய்யும் வலுசக்தி அமைச்சு கிடைக்கப் பெற்றுள்ளது.எனது அமைச்சில் உள்ள அனைத்து தரப்பினரையும் இனி வரும் காலங்களில் மரநடுகை செயற்திட்டத்தில் இணைத்துக் கொள்வோம்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் செயற்படுத்துவதில்லை ஆனால் நான் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அரசாங்கத்துடன் சண்டையிட்டு கொள்கிறோம் என மக்கள் கருதுகிறார்கள் ஆம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே அரசாங்கத்துடன் மோதிக் கொள்கிறோம்.

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் நானும்,அமைச்சர் விமல் வீரவன்சவும் எமது அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அரசாங்கத்தை திருத்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவோம்என மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.இன்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தில் முறையற்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்ட போதும்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தோம்.தற்போது யுகதனவி விவகாரத்திலும் மக்களுக்க வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்ற போராடுகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31