மாலைதீவுகளுடனான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

14 Nov, 2021 | 07:15 AM
image

(என்.வீ.ஏ,)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 4 நாடுகளுக்கு இடையிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டியில் முதலாவது அணியாக பங்களாதேஷ் முழுப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

மாலைதீவுகள் அணிக்கு எதிராக சனிக்கிழமை (14) பிற்பகல் நடைபெற்ற போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியதன் மூலம் பங்களாதேஷ் 3 புள்ளிகளைப் பெற்றது.

ஏற்கனவே சிஷெல்ஸுடனான போட்டியை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டிருந்த பங்களதேஷ், அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இப்போதைக்கு முதலிடத்தில் இருக்கின்றது.

போட்டியில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை திறமையாக விளையாடிய பங்களாதேஷ், போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டது.

மைதானத்தின் இடதுபுறத்திலிருந்து எறியபட்ட 'த்ரோ இன்' பந்து மாலைதீவுகள் பின்வரிசை வீரர் ஒருவரின் தலையில் பட்டு சென்றபோது கோல் வாயிலை நோக்கி நகர்ந்த பங்களாதேஷ் அணித் தலைவர் ஜமால் பூயான் கோலாக்கினார். ஆனால், உதவி மத்தியஸ்தர் கொடியை உயர்த்தி 'ஓவ் சைட்' என சமிக்ஞை செய்தார்.

எனினும் 'த்ரோன் இன்' பந்து மாலைதீவுகள் வீரரின் தலையில் பட்டுச் சென்றதால் அதனை ஓவ்சைட் என கருதமுடியாதென பிரதான மத்தியஸ்தர் டிலான் பெரேராவிடம் பங்களாதேஷ் வீரர்கள் சுட்டிக்காட்டி தீர்ப்பை மாற்றுமாறு கோரினர்.

இதனைத் தொடர்ந்து உதவி மத்தியஸ்தரிடம் கலந்துரையாடிய டிலான் பெரோ அதனை கோல் என அங்கீகரிக்க பங்களாதேஷ் 1 - 0 என முன்னிலை அடைந்தது.

எவ்வாறாயினும் போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் மாலைதீவுகள் சார்பாக அலி அஷ்பக்கின் கோர்ணர் கிக் பந்தை அணித் தலைவர் அக்ரம் அப்துல் கானி கோலை நோக்கி உதைக்க, மொஹமத் உமைர் கோலாக்கி, கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றிகோலைப் போட கடுமையாக முயற்சித்தன. இதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் மாலைதீவுகள் கோல் எல்லையை நோக்கி பந்துடன் ஓடிய பங்களாதேஷின் மாற்றுவீரர் ஜுவெல் ராணாவை மாலைதீவுகள் கோல்காப்பாளர் சமூஹ் அலி முரணான வகையில் வீழ்த்தியதால் பங்களாதேஷுக்கு மத்தியஸ்தர் டிலான் பெரேரா பெனல்டி ஒன்றை வழங்கினார்.

அந்தப் பெனல்டியை தோப்பு பர்மான் கோலாக்கி பங்களாதேஷுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20