கொழும்பில் மண் திட்டு சரிந்ததில் இளைஞன் உயிரிழப்பு

13 Nov, 2021 | 10:52 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு 5 - கிருலப்பனை பகுதியில், ஆழமான கால் வாய் ஒன்றுக்குள் நீர் குழாய் திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது, கால் வாயின்  மண் திட்டு  சரிந்து விழுந்ததில்  அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று அதிகாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவத்தில் 19 வயதான  நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கிருலப்பனை பொலிஸ் பிரிவில், பேஸ்லைன் வீதி - எட்மன்டன் வீதி சந்திக்கருகே, சுமார் 4.5 மீற்றர்கள் வரை ஆழமான கால் வாயொன்றில்  நீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 

இருவர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த இருவரும்  குறித்த குழாய் இணைப்பு பணியை முடித்த பின்னர், கானில்  தோண்டப்பட்ட பகுதியை மண்ணால் மூடும் போது, கால் வாயின் ஒரு பக்க மண் திட்டு சரிந்து 19 வயது இளைஞர் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதனால் மண்ணுக்குள் புதையுண்டு அந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், சடலம் களுபோவில வைத்தியசாலையில்  பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை  கிருலப்பனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36