முல்லைத்தீவு -  அம்பலவன் பொக்கணை பகுதியிலிருந்து 77 கிலோ 450 கிராம்  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரளா கஞ்சாவானது பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கேரள கஞ்சாவினை கொண்டுசெல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும்  பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.