4 வருடங்களில் 43,200 முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக மெக்சிகோ பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மெக்சிகோவைச் சேர்ந்த கார்லா செசின்டோ என்ற பெண்ணே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனக்கு நேர்ந்த நிலை பற்றி ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளதாவது.

நான்   5 வயதில் தனது தயாரால் நிராகரிக்கபட்டேன். இதன் பின்னர் தனது உறவினரால் 5 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்.  ஒரு நாளுக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் தான் 43, 200 முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்.


தான் 12 வயது வயதில் மனித கடத்தல் காரர்களால் குறிவைக்கபட்டேன். பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி நான் அவர்களால் கடத்தப்பட்டேன். 

நான் சில நண்பர்களுக்காக மெக்சிகோவின் சுரங்க ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு சிறுவன் இனிப்பு பொருள் ஒன்றை விற்பனை செய்து கொண்டிருந்தான். சிலர் எனக்கு இனிப்பு ஒன்றை பரிசாக கொடுக்க சொன்னதாக எனக்கு கொடுத்தான். 5 நிமிடங்களுக்கு பிறகு ஒரு வயதானவர் காரில் நான் இருந்தேன். 

தற்போது 23 வயதாகும்  கார்லா செசின்டோ மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான ஆதரவாளராக மாறிவிட்டார். அதனால் தான் தனது கதையை பகிரங்கமாக  தெரிவிக்கிறார். இதே கதையை வத்திகான் நகரில் போப் ஆண்டவரிடம் தெரிவித்தார்.  மேலும் மே மாதம் அமெரிக்க பாராளுமன்றத்திலும் தெரிவித்து இருந்தார்.

 மனித கடத்தல் மற்றும்   விபசாரத்திற்குள் தள்ளுவது என்பது  உலகில் மிகப்பெரிய பிரச்சினையாக வளர்ந்து வருவதாக கார்லா செசின்டோ தனது செய்தியில் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும்  மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும்  மனித கடத்தல்களின்  கொடூரமான உண்மைகளை கார்லா செசின்டோ சம்பவம் உணர்த்துகிறது. கார்லா செசின்டோ போன்றே     உலகில் 10 ஆயிரம் மெக்சிகோ பெண்களின் வாழ்க்கை அழிந்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மனித கடத்தல் ஒரு இலாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து  அட்லாண்டா மற்றும் நியூயோர்க் வரை பரவி வருகிறது.

டெனான்சினோ நகரில்  மனித கடத்தலுக்கு உள்ளாக்கபட்டு இளம் பெண்கள் விபசாரத்தில், தள்ளப்படுவதாகவும்   இது போல்  இந்தியா, நேபாளம் மற்றும்  பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிர கணக்கான பெண்கள் பாலியல் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும், சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செக்ஸ் பாலியல் சிறைச்சாலைகளுக்கு  விற்கபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.