பாக்கிஸ்தான் மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

Published By: Gayathri

11 Nov, 2021 | 08:52 PM
image

(ஏ.என்.ஐ)

பாகிஸ்தானில் மனித உரிமைகள் நிலை மோசமாகி வருவதால் குறிப்பாக சிறுபான்மையினர் பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.  

இது ஐரோப்பாவுடனான பாகிஸ்தானின் வர்த்தகம் உள்ளிட்ட ஏனைய உறவுகளைக்கூட கேள்விக்குறியாக்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு அண்மையில் பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இதன்போது சிவில் சமூக உறுப்பினர்கள் உட்பட பல தரப்புகளை சந்தித்து நிலைமைகளை  ஆராய்ந்த பின்னரே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக பாகிஸ்தான் விஜயத்தின் போது மூத்த வர்த்தக ஆலோசகர், வெளியுறவு அமைச்சர், வர்த்தகம் மற்றும் நீதித்துறை அமைச்சர்கள், சட்டமாதிபர்,  சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினர்  உள்ளிட்டவர்களை தூதுக்குழு சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக ஐரோப்பிய தூதுக்குழுவின் தலைவர் லூயிஸ் கரிகானோ குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தான் பொருட்களுக்கு ஜிஎஸ்பி10 சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 31 வகையான பொருட்களை பாக்கிஸ்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. 

மறுப்புறம் இந்த ஒப்பந்தமானது 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் காலாவதியாவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாக்கிஸ்தான் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஒப்பந்தத்தின் மனித உரிமைகள் பகுதி முன்னேறுவதை உறுதி செய்யவேண்டும். அதேபோன்று மனித உரிமைகளில் மாத்திரமே பாகிஸ்தான் செழிக்க முடியும்.

மாறாக தீவிரவாதத்தை தோற்கடிப்பதிலும் அக்கறையுடன் செயற்படவேண்டும். சிறுபான்மையினர் உரிமைகள் பெண்கள் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட மூன்று முக்கிய  விடயங்களில் பாக்கிஸ்தானின் நிலைமைகள் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17