(எஸ்.என்.நிபோஜன்)

தீ விபத்தினால் கடந்த  16 ஆம் திகதி எறிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை  17 ஆம்  திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்   மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு  தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றிருந்தார்.

அதன்பிரகாரமும்  கரைச்சிப் பிரதேச சபையினரால்  வழங்கப்பட்டுள்ள  மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப்  பொதுச்  சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு இன்று 9 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறித்த 9  மில்லியன் ரூபாய்  இன்றையதினம் ஒதுக்கப்பட்டுள்ளது  இதற்கான பூர்வாங்க  வேலைகளை முடித்து   குறித்த வேலைத்திட்டத்தினை  ஆக்கக்  கூடியதாக ஒன்றரை மாத காலத்திற்குள்  பூர்த்தி செய்து   பதிக்கப்பட்ட  கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்கள் வெகுவிரைவில் அவர்களது வர்த்தகத்தினை மீண்டும் ஆரம்பிக்க  வேண்டும் என்ற அறிவுறுத்தல்  வட  மாகாண  முதலமைச்சரினால்  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிற்கு  வழங்கப்பட்டு  இன்றையதினமே  கரச்சி பிரதேச சபைச் செயலாளர்  கம்சநாதனிற்கு வழங்கப்பட்டுள்ளது.