22,000 விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது - விசேட வைத்திய நிபுணர் ஷாமன் ரஜீந்திரஜித்

Published By: Digital Desk 3

11 Nov, 2021 | 12:51 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இதுவரையில் சுமார் 22 000 விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை 16 - 19 வயதுக்கிடைக்கப்பட்டவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் ஷமன் ரஜீந்திரஜித் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

விசேட தேவையுடைய சிறுவர்களில் 22 000 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் பதிவாகவில்லை.

இதே போன்று 16 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த வயதுப் பிரிவினரில் எமது இலக்கு 1.3 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்குவதாகவும் அந்த இலக்கை விரைவில் அடைய முடியும்.

மேலும் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்ளுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு அதனை அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்திலுள்ளன. 

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31