தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, நிறைவு செய்வதா வரவு-செலவு திட்டத்தில் பின் தீர்மானம் - இலங்கை ஆசிரியர் சங்கம்

Published By: Digital Desk 3

11 Nov, 2021 | 11:10 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அதிபர் - ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தீர்மானத்தை அறிவித்துள்ள போதிலும், தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக் கொண்டு வரும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை. 

நிதியமைச்சரின் உறுதிமொழி வரவு - செலவு திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் குறித்து கூட்டாக அறிவிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிப்பதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

நிதியமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து தற்போதைய சட்டப்படி கடமையில் ஈடுப்படல், பிற்பகல் 2 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுப்படல் ஆகிய தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

நிதியமைச்சரின் வாக்குறுதி வரவு – செலவு திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தொடர்பில் ஏனைய தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு கூட்டாக அறிவிப்போம். அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

ஆசிரியர் சேவை,அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவையை ஒன்றினைந்த சேவையாக்குதல் , ஆசிரியர்- அதிபர் சேவையினை கௌரவமான சேவையாக்குதல் அதிபர்களுக்கு மேலதிகமாக காரியாலயம் வழங்கல்  எரிபொருள் நிவாரணம் வழங்கல்

ஆசிரியர்- அதிபர் சேவைக்கான உத்தியோகப்பூர்வ அடையாள அட்டை வழங்கல்இ நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தலுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுத்தல்   ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்  கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தல் ஆகியவை அமைச்சரவை உபகுழுவின் மேலதிக பரிந்துரைகளாக காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41