டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் : விசேட வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு

Published By: Gayathri

11 Nov, 2021 | 05:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது. 

இவ்வாண்டில் மாத்திரம் இதுவரையில் 23,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இனங்காணப்பட்டுள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதேபோன்று பதுளை, மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டத்தில் அதிக டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது காணப்படுகின்ற கொவிட் அச்சுறுத்தலால் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெறுவதில் தயக்கம் காண்பிக்கின்றனர். இது தவறாகும். 

உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வெறுமனே மாத்திரைகளை மாத்திரம் எடுப்பது மரணம் வரை செல்லக்கூடிய அபாயத்தை தோற்றுவிக்கும்.

எனவே மருத்துவ ஆலோசனை இன்றி எவ்வித மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். 

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47