ஒரு நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியால் பிரதமரும் நெருக்கடியில் - சபையில் ஹக்கீம் 

Published By: Digital Desk 3

10 Nov, 2021 | 05:42 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அதன் தலைவர் நியமனம் தொடர்பில் பிரதமருக்கு இணக்கம் இல்லை. அதனால்தான் அதுதொடர்பில் அநுரகுமார திஸாநாயக்கவினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கால் மலுப்பிச்சென்றார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து பலரும் பேசிவருகின்ற பிரச்சினையாகி இருக்கின்றது.

அதனால் இதுதொடர்பாக அநுர குமார திஸாநாயக்க இந்த சபையில் பிரதமரிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார். குறிப்பாக அந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தலைவர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என கேட்டிருந்தார்.

ஆனால் பிரதமர் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், அரசியலமைப்பு திருத்தத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்பாக தெரிவித்துவிட்டு கேள்வியில் இருந்து நலுவிச்சென்றார்.

அரசியல் அனுபவம் உள்ள பிரதமருக்கு ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பாகவும் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் தலைவர் தொடர்பாகவும் இணங்க முடியாது என்பது எங்களுக்கு விளங்குகின்றது.

என்றாலும் அதுதொடர்பில் பதில் அளிக்க முடியாத நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டிருக்கின்றார் என்பதும் தெளிவாகின்றது. அத்துடன் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமனத்தால் பிரதமரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றார்.

அதேபோன்று கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும்போது அதற்கு பாரிய எதிர்ப்பு ஏற்பட்ட சந்தப்பத்திலும் பிரதமர் அதற்கு ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் அறிவிப்பொன்றை விடுத்த சந்தர்ப்பத்திலும் அதற்குக்கூட இந்த நாட்டின் பிரதானி ஜனாதிபதி இடமளிக்காத நிலையை நாங்கள் இதற்கு முன்னர் கண்டோம். அதனால் இவ்வாறானதொரு நிலைமையே தற்போது நாட்டில் இடம்பெறுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38