5 ஆவது கொரோனா அலை ஏற்பட்டு மக்கள் மரணித்தால் : பிரதான எதிர்க்கட்சியே பொறுப்பு - அமைச்சர் ரோஹித சபையில் தெரிவிப்பு

10 Nov, 2021 | 02:57 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனா மரணங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதே  எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு,விருப்பமாக உள்ளது, எனவே நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அத்தனை மக்களுக்கும் பிரதான எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10 ) இடம்பெற்ற ஒதுக்கீட்டு சட்டமூல திருத்தச  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார், 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் திரிபடைந்து வருகின்றது. இது மீண்டும் இலங்கையை தாக்குமானால் தடுப்பூசியால் கூட கட்டுப்படுத்த முடியாது. 

எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தினமும் எச்சரிக்கின்றனர். 

ஆனால் கொரோனாவின் ஐந்தாவது அலை எப்போது உருவாகுமென எதிர்க்கட்சி எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன் அதற்கு அழைப்பும் விடுக்கின்றது. இது கீழ்த்தரமான அரசியல் செயற்பாடாகும்.

ஒரு பக்கம்  விவசாயிகள் ஆர்ப்பாட்டம். இன்னொரு புறம் ஆசிரியர்கள் போராட்டம். இவற்றுக்கு  எதிர்க்கட்சியே  அனுசரணை.

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட முன்னர் முடிந்தளவுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வதே இவர்களின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11