சேதன பசளை விவகாரம் ; மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் எதிர்க்கட்சி - எஸ்.எம்.சந்திரசேன

10 Nov, 2021 | 11:58 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விவசாயத்தில் சிறந்த விளைச்சல் கிடைக்காவிடின் அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரது தரப்பினரும்  ஏற்க வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் சேதன பசளை தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. இரசாயன உர பாவனையில் இருந்து விலகி மக்களுக்க விசமற்ற பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்பதற்காக சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டம் 2020 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத்தேர்தலிலும் சுபீட்சமான எதிர்கால திட்டத்தின் உள்ளடக்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள்.

சேதன பசளை திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதல்ல தற்போது சேதன பசளை திட்டத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் எதிர்ப்பலைகள் தோற்றம் பெற்றுள்ளன. 

சேதன பசளை திட்டத்தை பயன்படுத்தி ஒரு பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள். பசளையை பாவிக்காமல் பிறிதொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

பெரும்போக பயிர்ச்செய்கையில் சிறந்த விளைச்சல் கிடைக்காவிடின் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரது தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சேதன பசளை திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை சித்தரித்து அதனூடாக அரசியல் பிரசாரம் செய்துக் கொள்கிறார்கள்.

சேதன பசளையை பயன்படுத்திய விவசாயத்தில் சிறந்த விளைச்சல் கிடைக்கப் பெறாவிடின் அதற்கான நட்டஈடு தருவதாக வழங்குவதாக அரசாங்கம் விவசாயிகளிடம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் விவசாயிகள் என குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு தரப்பினர் தொடர்ந்து நியாயமற்ற வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

எக்காரணிகளுக்காகவும் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் நோக்கத்தை கருதி ஜனாதிபதி சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பதை மக்கள் விவசாயிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44