உரப்பிரச்சினைக்குத் தீர்வின்றேல் இம்மாதம் 26 ஆம் திகதி விவசாயிகளால் பாராளுமன்றம் சுற்றிவளைக்கப்படும் - நளின் பண்டார

Published By: Digital Desk 3

10 Nov, 2021 | 10:10 AM
image

(நா.தனுஜா)

இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் விவசாயத்துறைக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. எனவே அதற்கு முன்னதாக அரசாங்கம் உரப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காவிட்டால், 26 ஆம் திகதியன்று விவசாயிகளை ஒன்றிணைத்து, பாராளுமன்றத்தைச் சுற்றிவளைக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அண்மைக்காலத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். விவசாயத்தில் ஈடுபடுவதற்கு அவசியமான நீர் போதியளவில் காணப்படுகின்றபோதிலும், உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பற்றாக்குறையின் விளைவாக விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். மிகச்சொற்பளவான விவசாயிகள் தமது குடும்பத்திற்குப் போதுமானளவு பயிர்ச்செய்கையில் மாத்திரம் ஈடுபடுகின்றனர்.

இந்த நெருக்கடியை அரசாங்கம் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. போதியளவு நீர் உள்ளபோதிலும் விவசாயத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதென்பது மிகப்பாரதூரமான பிரச்சினையாகும். 

ஆகவே விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை வழங்கி இந்தப் பிரச்சினையை முடிவிற்குக்கொண்டுவராவிட்டால், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் நாட்டிற்குத் தேவையான அரிசியின் தேவையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் ஊடாகவே பூர்த்திசெய்துகொள்ளமுடியும். 

இல்லாவிட்டால் அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதிசெய்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் பாணையே மூன்று வேளையும் உண்ணவேண்டியிருக்கும். ஆகவே உணவுப்பாதுகாப்பில் எமது நாடு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் விவசாயத்துறைக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. 

எனவே அதற்கு முன்னதாக அரசாங்கம் உரப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காவிட்டால், நாம் எதிர்வரும் 26 ஆம் திகதி விவசாயிகளுடன் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம். குறிப்பாக விவசாயிகளின் ஆயுதங்களுடனேயே அந்தச் சுற்றிவளைப்பு இடம்பெறும் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ளவேண்டும்.

இரசாயன உரப்பயன்பாட்டின் விளைவாக சிறுநீரகநோய் ஏற்படுகின்றது என்ற விடயம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இலங்கையில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலை பிரித்தானியா உள்ளடங்கலாகப் பெருமளவான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 

அதேபோன்று எமது நாட்டைவிடவும் பன்மடங்கு இரசாயன உரத்தைப் பயன்படுத்துகின்ற நியூஸிலாந்தில் வருடாந்தம் 4 சதவீதமானோர் மாத்திரமே சிறுநீரகநோய்களால் பாதிப்படைகின்றனர். அதேவேளை இலங்கையை விடவும் குறைந்தளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்துகின்ற பூட்டானில் சிறுநீரகநோய்களால் வருடாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்வாக உள்ளது. 

எனவே முறையான தரவுகள் எவையுமின்றியே இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. எனவே மிகமோசமான ஆட்சியை முன்னெடுத்துவரும் இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41