தூதுவர் சேவை யில் எமது உற­வி­னர்­களை நிய­மித்து தேயிலை வியா­பாரம் செய்­வ­தற்கும் ஆட்­களை கொலை செய்­வ­தற்கும் தூது­வர்­களை தாக்கி வைத்­தி­ய­சா­லை­களில் தங்க வைப்­ப­தற்­கு­மான அவ­சியம் அர­சுக்கு கிடை­யாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடிய போது வாய் மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐக்­கிய மக்க்ள சுதந்­திர முன்­னணி எம்.பி. உதய கம்­மன்­பில தெரி­வித்த கருத்­தின்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

வெளி­வி­வ­கார அமைச்சு தொடர்­பா­கவும் 14 மாதங்­க­ளா­கியும் இலங்­கை்­கான பிரிட்டன் தூதுவர் நிய­மிக்­கப்­ப­டாமை தொடர்­பாக உதய கம்­மன்­பில எம்.பி. கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

பிர­தமர் தனது பதிலில் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

வெளி­நாட்டு தூதுவர் சேவை­களில் எமது உற­வி­னர்­களை நிய­மித்து தேயிலை வியா­பாரம் செய்­வ­தற்கும் ஆட்­களை கொலை செய்­வ­தற்­கு­மான தேவை எமக்கு கிடை­யாது.

கடந்த ஆட்­சியின் போது தூதுவர் ஒருவர் தாக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார் பின்பு அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.

பிரிட்­டனில் வைத்து அவரை சந்­தித்த போது அவர் அனு­ப­வித்த நெருக்­க­டி­களை எனக்கு தெளி­வுப்­ப­டுத்­தினார். கடந்த ஆட்­சியில் தூது­வர்­க­ளுக்கு சுயா­தீ­ன­மாக இயங்க முடி­ய­வில்லை. அவர்­க­ளது தொலை­பேசி உரை­யா­டல்கள் ஒட்டுக் கேட்­கப்­பட்­டன .

பிரிட்­ட­னுக்­கான தூதுவர் இல்­லா­விட்­டாலும் எமது அரசு அந்­நாட்­டுடன் நெருங்­கிய தொடர்­பு­களை கொண்­டுள்­ளது. பிரிட்டன் பிர­தமர் உட்­பட உய­ர­தி­கா­ரி­க­ளுடன் நேர­டி­யாக தொலை­பே­சியில் பேசி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கக் கூடிய பலம் எமக்கு உள்­ளது.

பிரிட்­ட­னுக்கு மட்­டு­மல்ல அனைத்து நாடு­க­ளு­டனும் சிறந்த நட்­பு­றவை பேணி வரு­கின்றோம். அடுத்த வருடம் நியு­ஸி­லாந்து பிர­தமர் இலங்கை வரு­கிறார் என்றார்.

இதே­வேளை கம்­மன்­பில எம்.பி.யின் கேள்­விக்கு பதி­ல­ளித்த பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா கடந்த காலத்தில் பிரிட்­டனில் தூதுவர் தாக்­கு­த­லுக்கு உட்­பட்டு வெளி­யே­றிய பின்னர் பதில் தூதுவராக சுகீஸ்வர குணரத்ன நியமிக்கப்பட்டு கடமைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அவர் மாலைதீவில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பிரிட்டனுடன் அரசு சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றது என்றார்.