தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் : உள்துறை அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்

Published By: Gayathri

09 Nov, 2021 | 09:27 PM
image

தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் டொக்டர். கலாநிதி வீராசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய, டிசம்பர் 2014 க்கு முன்னர் இந்தியாவிற்குள் குடியேறிய மத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்கிறது.

இதில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உட்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம், இலங்கை தமிழ் அகதிகளை புறக்கணித்தது ஏன்? இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் தான்.

சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட திட்டமிட்ட வன்முறையால் 1980 களிலும், 1990 களிலும் வெளியேறிய இலங்கை தமிழ் அகதிகள், தமிழ்நாட்டில் தஞ்சம்பெற அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் அகதிகளாக வந்தவர்கள். சட்டவிரோதமாக வந்தவர்கள் அல்ல. 

அப்போதைய மத்திய அரசு அவர்களை வரவேற்றது. பதிவு செய்துகொண்டது. அகதிகள் முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியது. அவர்கள் இங்கே ஒரு வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள்.

இலங்கைக்கு திரும்பிச் செல்ல தாங்கள் வற்புறுத்தப்படுவோமா... என்று அவர்கள் அஞ்சுகின்றனர். உள்ளூர் மக்களோடு இணைந்து வாழ தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துவரும் ஒரு இலட்சம் அகதிகளின் துயரத்தை போக்குவதில் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.

ஆகவே, பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று அந்த கடிதத்தில் டொக்டர் கலாநிதி வீராசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22