புத்தளத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின ! ஒருவர் மாயம்

Published By: Gayathri

09 Nov, 2021 | 07:06 PM
image

புத்தளம் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் நகரின், கடையாக்குளம், நூர்நகர், மணல்குன்று, தில்லையடி, அல்ஜித்தாஹ், ரத்மலயாய, புத்தளம் - மன்னார் வீதி, பாலாவி குவைட் முகாம், மற்றும் நாகவில்லு முள்ளிபுரம், கல்லடி, ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கற்பிட்டி, நுரைச்சோலை, ஆலங்குடா, திகலி, நாவற்காடு கரம்பை, பகுதிகளும் உலுக்காப்பள்ளம், இலந்தையடி, நரக்கள்ளி, தழுவ ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் மேற்கொண்டு வரும் விவசாயப் பயிர்களும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களுடைய வீடுகள், வணக்கஸ்தலங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வந்த அடைமழைக் காரணமாக புத்தளம் கொழும்பு வீதியின் தில்லையடி முதல் கீரியங்கள்ளி வரை சுமார் மூன்று அடிக்கு மேலான நீர் சென்றமையினால் வாகன போக்குவரத்து நேற்று இரவிலிருந்து காலை வரை முற்றாகத் தடைப்பட்டது.

பின்னர் இன்று காலையிலிருந்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸார் இணைந்து வாகன நெரிசலைக் கட்டுபடுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) திங்கட்கிழமை மாலை காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், கொத்தாந்தீவு பகுதியிலுள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலைக்கு சென்று வெள்ளநீருக்குள் சிக்கிக் கொண்ட உறவினர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரை பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02