கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை - கிளிநொச்சி அரச அதிபர்

Published By: Gayathri

09 Nov, 2021 | 03:36 PM
image

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். 

இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னராக நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சீரற்ற காலநிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவிவ்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் 57 நபர்களைக்கொண்ட 27 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இவர்களில் ஒரு சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களிற்கான உடனடி உலருணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றம் சிறிய நீர்ப்பாசன குளங்களிற்கான நீர் வருகை குறைவாக தற்பொழுது காணப்படுகின்றது. 

இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதியில் 60.3 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவரை குளங்களிற்கு கீழான பகுதிகளில் ஆபத்தான நிலை இதுவரை இல்லை. 

பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் நீர்பாசன திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கனகாம்பிகைக்குளம் மற்றம் வன்னேரிக்குளம் ஆகியன வான்பாய்ந்து வருகின்றது. குறித்த பகுதியில் உள்ள மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு, பிரதேச செயலகம் மற்றும் நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்றைய தினம் பாடசாலைகள் நடைபெற்றபோதிலும் அவர்களை நேர காலத்தோடு வீடுகளிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெத்தோம். 

அதேவேளை நாளைய தினம் பாடசாலைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம். மேற்கொண்டு காலநிலையை அவதானித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவும் எண்ணியிருக்கின்றோம்.

பொதுவாக அனர்த்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் தொடர்ந்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலகங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது. 

அனத்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 

குறிப்பாக அண்மையில் பத்திரிகை செய்தியின் ஊடாகவும், தெரியப்படுத்தப்பட்டதான விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது. 

ஊற்றுப்புலம் கிராமத்தின் வள்ளுவர் பண்ணை கிராமம் போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு இரவு சீர்செய்யப்பட்டு இன்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

அவ்வாறு இடர் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. 

இரணைதீவு பகுதியில் இருக்கின்ற மக்களிற்கான விசேட ஏற்பாடுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக அங்குள்ள மக்கள் இவ்வாறான சூழல் ஏற்படுகின்றபொழுது அவர்களது உறவினர்கள் வீடுகளிற்கு வருவது வழக்கமானதொன்று. 

அவர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் கண்காணிப்பில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கௌதாரிமுனை பாடசாலைக்கு செல்வதற்கு காணப்படும் வீதி மிக மோசமான நிலையில்தான் காணப்படுகின்றது. அந்த வீதியையை ஓரளவு போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் அமைப்பதற்கான நடவடிக்கை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும், பலத்த மழை காரணமாக அந்த வீதி செயலிழந்து காணப்படுகின்றது. அதனால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் உள்ளிட்டோர் பாதிப்புறுகின்ற நிலைதான் காணப்படுகின்றது. 

திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு மழை இல்லாது இருக்கவேண்டும் என்பதுடன், அதற்கான சிறந்த திட்டமும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதற்காக முயற்சித்து வருகின்றோம்.

அதேவேளை அண்மையில் ஆசிரியர்கள் செல்வதற்கு பிரதேச செயலகத்தினால் விசேட ஒழுங்குகளும் செய்யப்பட்டது. 

அதற்கு மேலாக நிரந்தரமான நீர்வை ஏற்படுத்தவதற்கும் உத்தேசித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01