அரசியலமைப்பு மக்கள் மயப்பட்டதாக வேண்டும் : பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

Published By: Digital Desk 2

09 Nov, 2021 | 03:22 PM
image

அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக மற்றும் பொது மக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 28 பேரடங்கிய புத்திஜீவிகள் குழு ஒன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

1. 2020 செப்டெம்பர்  மாதம் அமைச்சரவை புதிய அரசியலமைப்பு வரைபினை தயாரிப்பதற்காக நிபுணர் குழு ஒன்றினை நியமித்தது. இக்குழு பல மாதங்களாக பொதுமக்களிடம் இருந்து முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டதுடன் தற்போது அரசியலமைப்பினைத் தயாரித்து வருவதனை ஊகிக்க முடிகின்றது. ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு 2022ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்படும் என அண்மையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் தற்போது இக்குழு அரசியலமைப்பினை உருவாக்குவதற்குக் கையாளும் செயன்முறை தொடர்பான எந்த ஒரு தகவலும் பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறுவதாக இல்லை. 

மேலும் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் உள்ளடக்கத்தினை தயாரிப்பதற்கு வழிகாட்டும் தத்துவங்கள் எவை என்பன தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாக இல்லை.  

நகல் அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பொது மக்களின் கலந்துரையாடலுக்கு அவகாசம் வழங்கப்படுமா? என்பது இதுவரை தெரியாமலேயே உள்ளது.

2. கடந்த காலங்களில் இலங்கையின் அரசியல் அமைப்பினைத் திருத்தவும்  மற்றும் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் பிரச்சினைக்குரியது என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.  

பின்பற்றப்பட்ட செயன்முறை மற்றும் உள்ளடக்கத்தில் அதிருப்தி காணப்படுகின்றது. அரசியலமைப்பு உருவாக்கத்தின் கடந்தகால அனுபவங்கள் எதனைக் கற்பிக்கின்றன என்பது தொடர்பாக ஒரு விமர்சன ரீதியான ஆய்வினை செய்து அதன்மூலம் பாடங்களைக் கற்றுக்கொண்டு, அதிலிருந்து முன்னேறி செல்லவேண்டும் என்பதனை நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

3. அரசியலமைப்பு உருவாக்கம் என்பது ஒரு சவால்மிக்க பணி. ஒரு பெட்டியில் புள்ளியிடுதல் என்ற செயல்முறைக்கு அப்பால் சென்று, பொதுமக்களின் பங்கேற்பினை வினைத்திறன்மிக்க வகையில்  உறுதிசெய்வது சவாலான காரியம்.

ஆயினும் அது அவசியமானதும்கூட. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் சில அம்சங்கள் அரசியல் பேரம்பேசல் மற்றும் பேச்சுவார்தைகளுக்குத் தீவிரமாக உள்ளாக வேண்டும். நல்லெண்ணத்திலும் நம்பிக்கையிலும் மேற்கொள்ளப்படுகின்ற சிறந்த முயற்சிகள் தொடர்ச்சியாக அதிருப்தியான பெறுபேறுகளையே வழங்கியுள்ளன. 

ஆயினும் மக்கள் பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான விடயங்களை பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளனர். காரணம் அரசியலமைப்பினை வரைதல் மற்றும் அதனை அங்கீகரித்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆணையினை  மக்கள் தமது பிரதிநிதிகளுக்கே வழங்கியுள்ளனர்.

ஆகவே, பொதுமக்களை  இச்செயன்முறையில் ஈடுபடுத்துவதானது அவர்களின் அபிப்பிராயங்கள்  கணக்கிலெடுக்கப்படுவதனை உறுதிசெய்வதாக அமையும். கலந்தாலோசனை இல்லாத அல்லது வெளிப்படைத்தன்மையில்லாத எந்த ஒரு செயன்முறையும் ஜனநாயக சமூகமொன்றில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

4. இலங்கைக்கான புதிய அரசியலமைப்பினை வரைவது முக்கியமான பணியாக இருந்தாலும் அச்செயன்முறையில் பொதுமக்கள் ஈடுபாடற்ற நிலையில் காணப்படுகின்றனர். ஏனைய சீர்திருத்த செயன்முறைகளான தேர்தல் சீர்திருத்தமும் இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்று அண்மையில் அறிவிக்கப்பட்ட முன்மொழிவு எமது கரிசனைக்கான காரணத்தினை வழங்கியுள்ளது. அது சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டினைக் கொண்டுள்ளது. இக்குழுவின் அங்கத்துவம் சகல சமூகங்களையும் சரியாக பிரதிநிதித்துவம் செய்யாமையினால் நம்பிக்கையினைப் பெறத் தவறியுள்ளது.

ஆயினும் இச்செயன்முறை நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பினை தயாரிக்கும் பணியுடன் சமாந்தரமான வகையில் இடம்பெறுவதனால், அரசியலமைப்புச் சீர்திருத்த பணியுடன் எவ்வாறு இணைந்து செல்லும் என்பது தெளிவில்லாமல் காணப்படுகின்றது.

5. பல்லின சமூகமொன்றில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற சிந்தனை நீண்டகாலத்தில் எத்தகைய எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பான எமது ஆழமான கரிசனையினையும் நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம். இலங்கையின் தேசிய ஐக்கியம் என்பது ஜனநாயக  அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் என்ற சட்டத்திற்குள் பல்லினத்தன்மையினை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.ஆகவே அரசாங்கத்தினை நாம் வலியுறுத்துவதாவது 

1. தற்போது இடம்பெற்று வரும் அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையில் உறுதியான பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதனை உறுதிசெய்ய வேண்டும். இதனை அரசியலமைப்புச் சீர்திருத்தக்குழு பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் தொடர்ச்சியாக அறிக்கையிடுவதன் மூலம் உறுதிசெய்ய முடியும்.

2. அரசியலமைப்பு வரைபுடன் இலங்கைப் பிரஜைகளை பரீட்சையமாக்கும் வகையில் மற்றும் அதற்குப் பங்களிப்பு செய்யும் வகையில் அர்த்தமுள்ள மற்றும் வினைத்திறன்மிக்க அரசியலமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பு வரைபினை மூன்று மொழிகளிலும் கிடைக்கப்பெற செய்ய வேண்டும். அதேநேரம் பொதுமக்கள் கலந்துரையாடலுக்கு மற்றும் விவாதத்துக்குப் போதிய அவகாசம் வழங்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டும்.

3. பொதுமக்கள் அரசியலமைப்பு வரைபுக்கு கருத்துக்களை மற்றும் உள்ளீடுகளை வழங்கும் வகையில் ஒரு பொருத்தமான செயன்முறையினை உருவாக்க வேண்டும்.

4. தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் புதிய அரசியலமைப்பொன்று அமுலுக்கு வருவதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையும் மக்கள் தீர்ப்பின் ஊடான அனுமதியும் அவசியம் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது. அத்தகைய மக்கள் தீர்ப்பொன்று இலங்கை பிரஜைகள் தமது வாக்குரிமையினை அறிவுறுத்தப்பட்ட, தர்க்க ரீதியாக சிந்தித்து மற்றும் பொறுப்புள்ள வகையில் பயன்படுத்த கூடிய சூழல் ஒன்றில் இடம்பெற வேண்டும் என்பதனையும் வலியுறுத்த விரும்புகிறோம்.    

கையெழுத்திட்டோர்

1. கலாநிதி அசங்க வெலிகல

2. பேராசிரியர் அபேசிங்க நவரத்ன பண்டார

3. அமீர் பாய்ஸ்

4. பேராசிரியர் அர்ஜீன பராக்ரம

5. கலாநிதி கலன சேனாரத்ன

6. கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 

7. குமுதினி சமுவேல்

8. கலாநிதி சகுந்தலா கதிர்காமர்

9. சஞ்சயன் ராஜசிங்கம்

10. பேராசிரியர் சுமதி சிவமோகன்

11. செரீன் அப்துள் சரூர்

12. கலாநிதி தினேசா சமரரத்ன

13. திஸ்ஸ ஜயதிலக

14. கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

15. கலாநிதி பிரியான் டயஸ்

16. கலாநிதி மரியோ கோமஸ்

17. மார்சல் பெர்னான்டோ

18. பெ. முத்துலிங்கம்

19. கலாநிதி ரமேஷ் ராமசாமி 

20. கலாநிதி ராதிகா குமாரசுவாமி

21. ரொஹான் எதிரிசிங்க

22. கலாநிதி லயனல் போபகே

23. கலாநிதி விசாகா சந்திரசேகரம்

24. பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

25. கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன

26. கே. டபில்யூ. ஜனரஞ்சன

27. ஜோப்ரே அழகரத்தினம் - ஜனாதிபதி சட்டத்தரணி

28. பேராசிரியர் ஹர்சன ரம்புக்வெல்ல

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13