கொவிட் 4 ஆவது அலையை இலங்கை அண்மித்துள்ளது - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

09 Nov, 2021 | 01:24 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை தற்போது நான்காவது அலையை அண்மித்துக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து மீண்டும் நாட்டை முடக்கிய கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஸ்தம்பிதமடையச் செய்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். 

எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அபாய நிலைமையிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பு பெற முடியும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கை தற்போது நான்காவது அலையை அண்மித்துக் கொண்டிருக்கிறது. உலகலாவிய ரீதியில் பல நாடுகளில் கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் காணப்படும் பலவீனம், போக்குவரத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் காணப்படும் பலவீனம், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை உள்ளிட்ட காரணிகளால் தற்போது தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதேநிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து மீண்டும் நாட்டை முடக்கிய கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஸ்தம்பிதமடையச் செய்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். 

எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அபாய நிலைமையிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பு பெற முடியும். அவ்வாறில்லை எனில் நான்காவது அலையில் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெளிவாகிறது.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளபட்டுள்ள நிலையில் கடந்த வாரத்தில் சில பாடசாலைகளில் மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் பெற்றோர் இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவை தொடர்பில் நாம் தீவிர கண்காணிப்பு செலுத்தி வருகின்றோம். 

மாறாக ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டை மீறி பாடசாலைகளில் கொவிட் வைரஸ் பரவுமாயின் உரிய ஆலோசனைகளை வழங்கி அவ்வாறான பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51