அண்ணாத்த -  மொத்தத்தில் ஓர்கானிக் ரக அண்ணன் -  தங்கை சென்டிமென்ட். - திரைவிமர்சனம்

08 Nov, 2021 | 08:31 PM
image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 168 ஆவது படமாக வெளியாகியிருக்கிறது 'அண்ணாத்த'. 'தர்பார்' படத்தை தொடர்ந்து 22 மாதங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் 'அண்ணாத்த' திரைப்படம் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதா...! இல்லையா...! என்பதை இனி காண்போம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் இந்திய மதிப்பில் 187 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாராகி, இலங்கை முழுவதும் 80 க்கும் மேற்பட்ட பட மாளிகையில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. ‘விஸ்வாசம்’ என அப்பா - மகள் சென்டிமென்ட்டை முன்வைத்து வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், அவரது வழக்கமான அண்ணன் - தங்கை சென்டிமென்டில் உருவாகி இருக்கிறது. 

டெல்டா மாவட்ட பகுதியான சூரக்கோட்டை எனும் பகுதியில் காளையன் என்ற கதாபாத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். 

ஊர் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய நினைக்கும் இவர், மக்களால் வெறுக்கப்படும் பிரகாஷ்ராஜை தன்னுடைய நேர்மறையான அணுகுமுறையால் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவருடைய மகனுக்கு தன்னுடைய பாசத்திற்குரிய தங்கையான தங்க மீனாட்சி ( கீர்த்தி சுரேஷ்) யை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். 

திருமணத்திற்கு முதல் நாள் தன் காதலருடன் கொல்கத்தாவிற்கு ஓடிப்போகிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் காளையன், தன் தங்கையைக் காண கொல்கத்தாவிற்கு செல்கிறார். 

அங்கு அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு, அதிலிருந்து அவருக்கு தெரியாமல் விடுவிக்கிறார். இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ‘அண்ணாத்த’ படத்தின் சுருக்கமான திரைக்கதை.

70 வயதான ரஜினிகாந்த் திரையில் ‘எனர்ஜி’ ஸ்டாராக தோன்றுவது இன்றைய இளம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தருவதால் அவர்களும் ‘அண்ணாத்த’ படத்தை ரசிக்கிறார்கள். 

குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், சத்யன், ஆகியோரின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் சில இடங்களில் சிரிக்கிறார்கள். சட்டத்தரணியாக நடிகை நயன்தாரா தோன்றினாலும், அவரது முகத்தில் இளமை மிஸ்ஸானதால் அவரை ரஜினியின் ஜோடியாக ரசிக்க முடியவில்லை. 

தங்க மீனாட்சியாக கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தேகம் மெலிந்து, அழுக்காச்சியாக நடித்திருப்பதை ரசிக்கமுடியவில்லை. அத்துடன் ரஜினிகாந்த் - கீர்த்தி சுரேஷின், அண்ணன் - தங்கை கெமிஸ்ட்ரி எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

'வா சாமி..' பாடல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். டி இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் காதை நாசமாக்கி விட்டார்.

ரஜினிகாந்தின் வசனங்கள், பழைய பாணியாக இருந்தாலும் அவரின் உச்சரிப்பில் கேட்கும்பொழுது நன்றாகத்தான் இருக்கிறது.

திரைக்கதை பார்வையாளர்கள் ஊகித்தப்படியே நகர்வதால் தொய்வு ஏற்பட்டாலும் ரஜினி என்ற ஒரே ஒரு பிம்பத்தின் காரணமாக படத்தை முழுவதும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இதைத்தான் விமர்சகர்கள் 'ரஜினியிஸம்' என்று குறிப்பிடுகிறார்கள்.

ரஜினியின் அண்மைக்கால படங்களான ‘காலா‘, ‘கபாலி’, ‘பேட்ட’, ‘தர்பார்’ ஆகிய படங்களை விட, ‘அண்ணாத்த’ படம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் குடும்பத்துடன் ஒருமுறை படமாகி சென்று ரசிக்கலாம்.

அண்ணாத்த -  ஓர்கானிக் ரக அண்ணன் - தங்கை சென்டிமென்ட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35