ஜம்மு காஷ்மீருக்கு சைபர் குற்ற விழிப்புணர்வு

Published By: Gayathri

08 Nov, 2021 | 07:39 PM
image

(ஏ.என்.ஐ)

ஜம்மு காஷ்மீர்  பொலிஸார் புல்வாமா பகுதியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். அப்பகுதி பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைக் கண்காணிப்பாளர் முகமது ஷபி, சைபர் குற்றங்கள் குறித்தும் இணைய மோசடிகள் குறித்தும் மக்களுக்க விளக்கமளித்து உரையாற்றினார். 

அடையாள திருட்டு, கிரெடிட் கார்டு மோசடி, தரவு திருடுதல், சைபர் ஸ்டால்கிங், சிறுவர் துஷ்பிரயோகம், ஆபாசத்தைப் பரப்புதல் போன்றவை குறித்து விளக்கமளித்தார்.

சைபர் குற்றங்களுக்கு எதிரான முழு பாதுகாப்பு அமைப்பும் அடங்கிய சிறு புத்தகங்களும் பங்கேற்பாளர்களிடையே விநியோகிக்கப்பட்டன. 

அதேபோன்று புல்வாமா பொலிஸாரின் முக்கிய  தொலைப்பேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. எந்தநேரத்திலும் சைபர்  குற்றங்கள் குறித்து அறிவிக்கவும் அதற்கெதிரான நடவடிக்கைள் குறித்தும் ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டன.

மேலும் சைபர் மோசடிகள் மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றிய தகவல்களை வழங்க ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17