அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்யும் தீர்மானமில்லை !விசாரணைகளின் பின் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே நடவடிக்கை

08 Nov, 2021 | 04:17 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அருட்தந்தை சிறில் காமினியை தற்போதைய நிலையில், கைது செய்யும் எந்த தீர்மானங்களும் இல்லை என சி.ஐ.டி.யினர் சட்ட மா அதிபர் ஊடாக  உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இவ்வாறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன் போது சி.ஐ.டி.யின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜராகிய  சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய உயர் நீதிமன்றத்திற்கு  இன்று திங்கட்கிழமை  (08) இதனை அறிவித்தார்.

சி.ஐ.டி.யின்  பணிப்பாளர் உள்ளிட்ட சி.ஐ.டி. அதிகாரிகளுக்காக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய மன்றில் அஜரான நிலையில் மனுதார் அருட்தந்தை சிறில் காமினிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன ஆஜரானார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்கத்திடம் முறையிட்டிருந்தார்.

அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்புரைகள்  பிரகாரமும், தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களின்  கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பபடும் நிலையில்,  அது குறித்த விசாரணைகளுக்கே குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை ஆஜராகுமாறு அறிவித்திருந்தது.

இந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முதன் முதலாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு, அறிவித்திருந்தது.

எனினும் அருட்தந்தை சிறில் காமினிக்காக அன்றைய தினம் சி.ஐ.டி.யில் ஆஜராகிய 3 அருட் தந்தைகள்,  அதற்காக ஒருவார கால அவகாசம் கோரியிருந்தார்.

இதனடிப்படையில்  கடந்த நவம்பர் 3 ஆம் திகதி மு.ப. 9.30 க்கு வருகை தருமாறு மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களம்  அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவித்தது. 

இந் நிலையிலேயே உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறி, தனது சட்டத்தரணியூடாக எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ள அருட் தந்தை விசாரணைகளுக்கு செல்வதை தவிர்த்திருந்தார்.

இதனால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக முடியாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ  அந்த அறிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே இன்று அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32