சாதாரண தர , உயர்தர மாணவர்களுக்கு இன்று பாடசாலை ஆரம்பம்

Published By: Digital Desk 3

07 Nov, 2021 | 09:55 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய உயர்தரம் மற்றும் சாதாரண தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் முதன்முறையாக கொவிட் தொற்று இனங்காணப்பட்டதையடுத்து , மாணவர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட்டன.

அதன் பின்னர் இந்த இரு ஆண்டுகளாகவும் பல்வேறு சந்தர்ப்பங்கள் பாடசாலைகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன.

எவ்வாறிருப்பினும் தற்போது கொவிட் பரவல் நிலைமையானது ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் நிலையில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாகவும் , அதனையடுத்து 1 - 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இன்று முதல் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேபோன்று ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் கற்பித்தலை ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாடளாய ரீதியில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சகல மாணவர்களுக்கும் கற்பித்தலை ஆரம்பிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் பலமாக அமையும் என்று நம்புகின்றோம். அதற்கமைய ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.

தமது பிள்ளைகளுக்கு பெறுமதிமிக்க கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே சகல பெற்றோரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. அரசாங்கம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

எனவே சகல ஆசிரியர்களும் தேசிய பொறுப்பை நிறைவேற்றும் வகையில் பாடசாலைகளுக்கு சமூகமளித்து கற்பித்தலை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40