அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும் - அத்தியாவசிய பொருட்கள் மற்றும் திரவ இறக்குமதியாளர் சங்கம்

Published By: Digital Desk 3

07 Nov, 2021 | 09:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்தில் இருந்து  விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை துரிதகரமாக முன்னெடுக்காவிட்டால் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் தற்போது காணப்படும் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என அத்தியாவசிய பொருட்கள் மற்றும் திரவ இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடாக பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகிறது. டொலர் பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாத காலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் திரவ இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள். சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட போதும் அரசாங்கம் கொள்கலன்களை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியது.

பெருமளவிலான அத்தியாவசிய பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.இருப்பினும் அவற்றை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அப்பொருட்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் விரைவான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.இல்லாவிடின் தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் காணப்படும் நெருக்கடி மேலும் தீவிரமடையும்,

சமையல் எரிவாயு, சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொலர் பிரச்சினை காரணமாக அவற்றை துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்ததையில் ஈடுட்டோம்.

இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவ்விடயம் குறித்து கலந்துரையாடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோரும், வர்த்தகர்களும் பாதிப்படையாத வகையில் அத்தியாசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு கோரியுள்ளோம்.முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கப் பெறும்.என எதிர்பார்க்கிறோம்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08