இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு பாரிய முதலீடுகள் கிடைக்கப்பெறும் - ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை

Published By: Digital Desk 3

07 Nov, 2021 | 08:18 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆளுந்தரப்பிலுள்ள கட்சிகளுக்கிடையில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்படக் கூடும். எனினும் அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த வாரம் முன்னெடுத்த விஜயத்தின் பலனாக இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு பாரிய முதலீடுகள் கிடைக்கப் பெறவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்தார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் , மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் , மெதகம தம்மானந்த தேரர் , நாரம்பனாவே ஆனந்த தேரரை ஆகியோரை சந்தித்து அமைச்சர் ஆசி பெற்றுக் கொண்டார்.

அமைச்சருடனான சந்திப்பின் போது அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் கருத்து வெளியிடுகையில் , ' எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் தற்போது இடம்பெற்றுள்ள தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ளது தொற்று நிலைமை என்பதை தெரிந்து கொள்ளாத சிலரும் , இந்த தொற்று நிலைமை உலகலாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்திருந்தும் எதிர்க்கட்சியினரும் இணைந்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

எனவே இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.' என்றார்.

மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கையில் , 'சேதன உரப்பாவனையை ஊக்குவிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் சிறந்ததாகும்.

எனினும் சிலர் இதனை தோல்வியடைச் செய்ய முயற்சிக்கின்றனர். விவசாயிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுபவை என்று தெளிவாகத் தெரிகிறது.

எனவே சேதன உரதிட்டம் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றார். சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் , ' ஆளுந்தரப்பிலுள்ள கட்சிகளுக்கிடையில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்படக் கூடும்.

எனினும் அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த வாரம் முன்னெடுத்த விஜயத்தின் பலனாக இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு பாரிய முதலீடுகள் கிடைக்கப் பெறவுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தினால் மாற்றப்பட்ட தேர்தல் முறைமைகள் எம்மார் சீரான முறையில் சரி செய்யப்படும். அத்தோடு புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்படும்.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18