சீரற்ற காலநிலை தொடரும் : இரு வாரத்தில் 4000 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 3

07 Nov, 2021 | 08:13 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் மேல் , சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

150 மி.மீ. மழைவீழ்ச்சி


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் , மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும். ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்.

மண்சரிவு எச்சரிக்கை


பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , காலியில் நாகொட, பத்தேகம, நெலுவை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , களுத்துறையில் அகலவத்தை, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , கண்டியில் யட்டிநுவர, பஸ்பாகே கோரள, கங்காவத்தை கோரள, உடுநுவர, தொலுவ, ஹரிஸ்பத்துவ, உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்  மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கேகாலையில் யட்டியாந்தோட்டை, அரநாயக்க, புளத்கொஹூபிட்டி, கேகாலை, ருவன்வெல்ல, ரம்புக்களை, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மல்லவப்பிட்டி மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் ரத்தோட்டை மற்றும் உகுவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , இரத்தினபுரியில் கலவான மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இரு வாரத்தில் 4000 பேர் பாதிப்பு

நாட்டில் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இம்மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடும் மழை, காற்று, வெள்ளம், மின்னல் தாக்கம் , மண்சரிவு என்பவற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47