தீர்க்கமான ஆட்டத்தில் நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

Published By: Vishnu

07 Nov, 2021 | 10:30 AM
image

2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் குழு 1 இல் அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ள நிலையில், குழு 2 இல் மூன்று அணிகள் பாகிஸ்தானுடன் இணைந்து அரையிறுதிக்குள் நுழையும் ஆவலுடன் காத்திருப்பில் உள்ளன.

Afghanistan 16x9

சூப்பர் 12 சுற்றின் முதல் நான்கு ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்ததால், நாக் அவுட் இடத்தை பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் உறுதி செய்துள்ளனர்.

மற்றொரு அரையிறுதி இடத்துக்கான மோதிலில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் உள்ளன.

மூன்று அணிகளின் நடப்பு டி-20 உலகக் கிண்ண பயணத்தின் கேள்விக் குறி இன்று ஆப்கானிஸ்தானுடனான நியூசிலாந்தின் ஆட்டத்தில் தெரியவரும். அனால் அபுதாபி ஷேக் சயீத் மைதானம் மீது அனைவரது கனவமும் இன்று திரும்பும்.

 

நியூஸிலாந்து

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடிப்பதன் மூலம் அரையிறுதிக்கான தங்களின் இடத்தை நியூஸிலாந்து உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

இந்த வெற்றி அவர்களை எட்டு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு அழைத்துச் செல்லும்.

நியூசிலாந்து வெற்றி பெற்றால் அதேநேரம் பாகிஸ்தான் ஸ்காட்லாந்துடனான ஆட்டத்தில் ஆச்சரியமான தோல்வியை சந்தித்தால், சூப்பர் 12 சுற்றில் சிறந்த நிகர ரன்-ரேட் மூலம் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடிக்க முடியும்.

இவ்வாறு நிகழ்ந்தால் நியூஸிலாந்து குழு 2 இல் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா சூப்பர் 12 சுற்றுடன் நாடு திரும்பும்.

 

ஆப்கானிஸ்தான்

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அனைத்து வகையான வரிசை மாற்றங்களும் நிகழும்.

இந்த வெற்றி அவர்களை ஆறு புள்ளிகளுடன் நியூஸிலாந்தின் இடத்தில் சமனிலை படுத்தும். இதன்போது இரு அணிகளதும் சிறந்த நிகர ரன்-ரேட் கவனத்தில் கொள்ளப்படும்.

ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கான தனது  இடத்தைப் பிடிக்க நியூசிலாந்திற்கு எதிரான வெற்றி மாத்திரம் போதுமானதாக இருக்காது.

அவர்களை பொறுத்தவரை, நிகர ரன்-ரேட் முக்கியமாக இருக்கும், மேலும் திங்களன்று நமீபியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்தில் அவர்கள் ஒரு கண் வைத்திருப்பார்கள். 

 

இந்தியா

நிகர ரன்-ரேட்  இல் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டையும் தாவிச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு இந்தியா அந்தப் போட்டிக்கு ஆயர்த்தம் ஆவார்கள்.

இந்தியா தோல்வியடைந்தாலோ அல்லது குறைந்த நிகர ரன்-ரேட்டுடன் போட்டிகளை முடித்தாலோ அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறலாம்.

இந்தியா நமீபியாவை தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இரண்டையும் விட சிறந்த நிகர ரன்-ரேட்  ஐப் பெற்றால் அரையிறுதிக்குச் செல்லும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20