சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை முழுமைப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வோம்- ஜோன்ஸ்டன் 

07 Nov, 2021 | 07:42 AM
image

(இராஜதுரை ஹஷான்)

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும், அதனை நிறைவேற்றுவதில் பெரும் சவால் காணப்படுகிறது.

சவால்களை கண்டு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம்.சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை முழுமைப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வோம்.என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

வீரகெடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற '1500 சாலை மக்கள் பாவனைக்கு' திறந்து வைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

பொருளாதார பாதிப்பு, கொவிட் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு முகம் கொடு;த்து கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.

கொவிட் தாக்கத்தினால் நாட்டின் அபிவிருத்தி பணிகள் முடக்கி வைக்கவில்லை. தற்போது 1500 சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 எதிர்வரும் மாதம் 2400 ஆயிரம் வீதிகள் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும்.நாட்டின் முன்னேற்றத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மறுபுறம் விவசாயத்துறையினை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குளங்களை புனரமைக்கும் திட்டம் தற்போது நிறைவுப் பெறும் தருவாயில் உள்ளது.

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கதாக காணப்படுகிறது.இரசாயன உர பாவனையினால்; பாதிப்பு ஏற்பட்டதன் பின்னர் வைத்தியசாலைகளை நிர்மாணிக்காமல், பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை பெருமைக்குரியது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்திட்டத்தை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுவோம்.நல்லதை செய்தாலும் விமர்சிக்கும் பலவீமான எதிர்க்கட்சியினர் உள்ளனர்.விமர்சனங்களுக்கு மத்தியில் அபிவிருத்தி பணிகளை தொடர்வோம்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51